ஸ்ரீபெரும்புதூர்

	


		
 
	
 
11:50:32 AM         Friday, May 14, 2021

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர்
Product Code: ஸ்ரீபெரும்புதூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                              ஸ்ரீபெரும்புதூர், கனகாளிஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

 இறைவன்: கனகாளிஸ்வரர் 

இறைவி : கனாகாம்பிகை

தலச் சிறப்புகள் : திருஞான சம்பந்தருக்கு தனி சன்னதி, மற்றும் 63 நாயன்மார்களுக்கு சன்னதி உள்ளது. காலையில் இறைவனுக்கு பால் அபிஷேகத்தை தனது கைகளால் செய்யலாம். லிங்கம் நர்மதா நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சுயம்பு மூர்த்தியாகும். சுவர்ண அகர்ஷ்ண பைரவ மற்றும் சுவர்ண காளியும் தனி தனி சன்னதியில் பரிகார மூர்த்தியாக உள்ளனர்.

தல வரலாறு : பாணாசுரன் முன்பொரு காலத்தில் பூமியில் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். தினமும் ஒரு சிவபானம் வைத்து பூஜை செய்வான். பூஜை முடிந்தபிறகு நர்மதா நதி கரையில் விட்டுவிடுவான். இப்படி  இரண்டாயிரம் ஆண்டுகள் பூஜை செய்த பின் சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பாணாசுரன் தேவர் மூவர்களும் , பறவைகள், விலங்குகள், எந்த ஒரு ஆயுதம் போன்றவற்றால் எனக்கும் மரணம் வரக்கூடாது என்று கேட்டான். வரத்தை அளித்து இறைவன் மறைந்தார். இதனால் தலைக்கனம் கொண்ட சூரன் தேவர்களை கொடுமை படுத்தினான். தேவர்கள் பராசக்தியிடம் முறையிட்டனர். அன்னை நெடுக்காலம் போர்புரிந்து வெற்றி பெற முடியவில்லை, பிறகு பரமேஸ்வரிடம் சென்றனர். பரமேஸ்வரன் விழுங்கி விட்டார் உடனே அன்னை காளியாக மாறி பத்மாசுரனை அழித்தாள். இதனால் அன்னைக்கு ப்ரம்மத்தி தோஷம் ஏற்பட்டது. காளியானவள் பல்வேறு இடங்களில் தவம் செய்தாள். இங்கு ஏழு தலைகளை கொண்ட பெரிய நாகமாக மாறி ஈசனை நோக்கி தவம் செய்தாள்.  ஈசன் இயற்கை பேர் அழிவில் இருந்து காப்பாற்றும் படி ஆணை இட்டு முடிவில் காளையர் கோவிலில் வந்து தவம் செய்து தன்னை சேரும்படி கூறி மறைந்தார். 

திருவிழா நாட்களில் சுற்றி உள்ள பத்து கிராமங்களிலும் பிரமோற்சவம்காலங்களில் ஸ்ரீ கனாகாம்பிகை உடனுறை ஸ்ரீ கனகாளிஸ்வரர் புறப்பாடு நடைபெறும். இங்கு கோவில் கொண்டுள்ள சுவர்ண காளிக்கு பொங்கல் இட்டு எலுமிச்சை பழ மாலையிட்டு வழிபட்டால் அனைத்து வறுமையும் போகும். சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பிரதோஷம், சித்ரா பவுர்ணமி மற்றும் முக்கிய விரத காலங்களில் நாட்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. 

காலை 5.30 மணி முதல்  இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம், சென்னை 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×