வில்லிவாக்கம்

	


		
 
	
 
5:11:38 AM         Sunday, October 25, 2020

வில்லிவாக்கம்

வில்லிவாக்கம்
வில்லிவாக்கம் வில்லிவாக்கம் வில்லிவாக்கம் வில்லிவாக்கம் வில்லிவாக்கம் வில்லிவாக்கம் வில்லிவாக்கம் வில்லிவாக்கம் வில்லிவாக்கம்
Product Code: வில்லிவாக்கம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                        வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.

இறைவன்  :  அகத்தீஸ்வரர்

இறைவி   :  சொர்ணாம்பிகை 

தல விருட்சம்:  வில்வ மரம்

தல தீர்த்தம் : அங்காரக தீர்த்தம்

தலச் சிறப்புகள் : தென்திசை வந்த அகத்தியர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட ஒரு தலம்தான் வில்லிவாக்கத்தில் உள்ள சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயமாகும். அகத்தீஸ்வரர் வழிபட்ட லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.

அந்த கால கட்டத்தில் தற்போதைய வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வ லனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.

தல வரலாறு:  ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் மகரிஷிகள் கூடினர். அங்காரகன் என்ற கிரகத்தால் உலகுக்கே பல தீமைகள் வருவதை அறிந்து அதை நிவர்த்திக்கப் பெரிய யாகம் ஒன்றைச் செய்தனர். விசுவாமித்திரர் கலந்து கொண்ட இந்த யாகத்தில் தோன்றிய பூதம் அங்காரகன் மீது சென்றது. அப்போது அங்காரகன் “தன் பெயரில் தீர்த்தம் ஒன்று அமைத் தால் தனது கொடிய அதிகாரங்களைச் செலுத்தாமல் இருக்கிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்திரன் முதலானோர் சேர்ந்து இத்தலத்தில் “அங்காரகதீர்த்தம்” அமைத்து நீராடி வழிபட்டனர்.

பஞ்சமாபாதகன் என்றாலும் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பரம பவித்ரனாகி விடுவான். மார்க் கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம்பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், முக்தர்களும்,யோகிகளும், ஞானிகளும் செவ்வாய்க்கிழமை தோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

அகத்தியரால் அமைக்கப் பெற்ற இந்த லிங்க வடிவத்தைப் பார்த்த மாத்திரத்தில் அறிவும், ஆற்றலும் அருந்தவச் சீலமும் கைவரப் பெறுவர். நாகலோகக் கன்னியர்களும், கந்தர்வர்களும் வழிபட்ட பெருமைக்குரியது இத்திருமூர்த்தமாகும். ஆதியில் திருக்கயிலாயத்தில் உமா மகேசுவரன் வீற்றிருக்கும் காலத்தில் ஒருநாள் திடீரென்று செம்மணிச்சுடர் ஒன்று தோன்றித் தெற்கு திசையை நோக்கிச் சென்றது. அதன் அர்த்தம் என்னவென்று கேட்ட தேவர்களுக்கு நந்தி பெருமான். வில்லி வாக்கத்தில் உள்ள செவ்வாய் ஷேத்திரத்தில் பரமேஸ்வரன் அமர்ந்து திருவிளையாடல் செய்யப் போகும் நிமித்தம்தான் இது என்று விளக்கினார்.

ஸ்ரீஅகத்திய மாமுனிவருக்கு அருள் பாலித்து வில்வன், வாதாபி என்ற இரு அரக்கர்களை வதம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலமாகும்.  பெருமை பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். 

அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவஅம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, “ஐஸ்வர்ய வீரபத்திரர்’ என்று அழைக்கிறார்கள்.

நவக்கிரகங்களில் அங்காரகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, “செவ்வாய்க்கிழமை கோயில்’ என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். 

ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவது உறுதி. அமாவாசையில் நீராடுவோர் சத்துரு பயமின்றி வாழ்வர். பவுர்ணமியில் நீராடுவோர் சகல சம்பத்துக்களும் பெற்றுச் சகல யோகம் மிக்க பெருவாழ்வு வாழ்வர்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பொதுவாக சக்தி தலங்களில்தான் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும். பொங்கல் வைப்பதும், நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும், புற்றுக்கு முட்டை, பால் ஊற்றுவதும் கோலாகலமாக இருக்கும். ஆனால் சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பக்தைகள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலயம் 500 ஆண்டு கால புராதான சிறப்பு மிக்கது. புராண கால பிரசித்தியும் பெற்றது. கைலாய்த்தில் இருந்து தென்னகம் வந்த அகஸ்யர் வழி எங்கும் சிவலிங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவை இன்றும் அகத்தீஸ்வரர் என்ற பெயரில் ஆலயங்களாக எழுந்து காலங்களை கடந்து அருள் வழங்குகின்றன. சென்னை சுற்றியும் சென்னையிலும் அகஸ்தியர் வழிபட்ட பல தலங்களும் திருக்கோயில்களும் உள்ளன .அவை ஒவ்வொன்றும் ஒரு தனி சிறப்புகளைக் கொண்டது. சென்னையில் அகத்தியர் வழிபட்ட தலங்களில் வில்லிவாக்கமும் ஒன்று. அகஸ்தியர் வழிபட்ட ஈசன் என்பதால் இங்கும் சிவபெருமான், அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார்.

பரமசிவனுக்கும் பார்வதிதேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைப்பெற்றபோது தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், யோகிகளும் மனிதர்கள் மற்றும் சகல ஜிவராசிகளும் ஒரே இடத்தில் கூடியதால் வடக்கு நாழ்ந்து தெற்கு உயர்ந்தது. ஜீவராசி சரிந்து பாதாளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டது . ஜீவராசி துன்பத்திற்கு ஆளாவதை, அதுவும் தம் திருமணத்தை காண வந்த கண்டு ஜீவராசிகள் துன்பத்திற்கு ஆளாவதை பொறுப்பான ஈசன். சம நிலைப்படுத்தும் பொருட்டு குள்ளமுனிவரான அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கி அனுப்பி வைத்தார்.

தென்னகம் வந்த வழியில் அந்நாளில் வில்வவனமாக இருந்த இப்பகுதியில் வாழ்ந்த வில்வலன், வாதாபி என்ற அசுர சகோதரர்களை சந்திக்க நேர்ந்தது. அந்த அசுரர்கள் அந்த வழியே வரும் முனிவர்களை தந்திரமாக சென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அகத்தியரை கண்டு மகிழ்ந்த அசுரர்கள் அவரையும் உண்ண திட்டமிட்டனர். அதை உணர்ந்த அகஸ்தியர் அவர்களுக்கு பாடம் புகட்டினார். வாதாபி மாயத்தால் மாம்பழம் ஆக மாறினான். அதை உண்ணுமாறு விருந்துக்கு அகஸ்தியரை அழைத்தான் வில்லவன். அதை அகஸ்தியர் உண்பார் அவர் வயிற்றுக்குள் மாம்பழமாய் போன வாதாபி சுயஉரு பெற்று அகஸ்தியர் வயிற்றை கிழித்து அவரை கொல்வான். பின்னர் இருவரும் அவரை சாப்பிட்டு சந்தோஷப்படலாம் என திட்டமிட்டனர். ஆனால் அந்த மாய மாம்பழத்தை உண்ட அகஸ்தியர் மாம்பழமாய் இருந்த அசுரன் வாதாபியை தன் ஆற்றலால் ஜிரணித்து விட்டார். அதனால் ஆத்திரமடைந்து தன் மீது பாய்ந்த அசுரன் வில்லவனை தன் தண்டத்தால் தாக்கிக் கொன்றார் அகஸ்தியர். அசுரர் பயத்தில் இருந்து அப்பகுதி மக்களும் வழிப்போக்கர்களும் விடுபட்டனர் என்றாலும் அசுரர் கொன்ற தோஷம் அகஸ்தியரை பிடித்துக் கொண்டது. அதோடு அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது அம்பாள் திருமண கோலத்தில் பொன் நகைகள் அணிந்திருந்தாள். எனவே வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை எனக் கொண்டாடப்படுகிறாள்.

காலை 6.30 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை மத்திய ரயில் நிலையம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×