செய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு
	


		
 
	
 
2:16:55 PM         Thursday, August 13, 2020

செய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு

Product Code: செய்யாற்றை வென்றான் - செய்யாறு - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் உள்ளது இத்தலம். தொண்டை நாட்டில் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான திருவோத்தூர் திருத்தலத்திலிருந்து தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் செய்யாற்றை வென்றான் கிராமம் உள்ளது செய்யாறு ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இத்தலம். மேலும் காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுவாமி : செய்யாற்றை வென்றான்

அம்பிகை : திரிபுரசுந்தரி

தீர்த்தம் : செய்யாறு

திருத்தல வரலாறு : திருஞானசம்பந்தர் வரலாறு பயின்றவர்களும் இந்துக்கள் பலரும் திருவோத்தூர் தலபுராணம் ஓதியவர்களும், இந்த தலத்தின் மகிமையை அறிவார்கள். திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களின் செருக்கையழித்து. சைவம் தழைக்கச் செய்த வரலாற்று உண்மைகளையும், அதுபோலவே திருவோத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்த சமணர்களின் செருக்கும் திருஞானசம்பந்தரால் அடக்கப்பட்டது என்பதையும் அறிவார்கள். மதுரை வரலாற்றோடு இடம்பெற்ற அனல்வாதம், புனல்வாதம் போன்று திருவோத்தூரில் திருஞானசம்பந்தர் வாதங்களில் வென்று, சைவத்தை நிலைநாட்டிய செய்தியை திருவோத்தூர் தலபுராணம் பயின்றவர்களும், திருவோத்தூரை வழிபடும் வாய்ப்பு பெற்ற சிலருமே அறிவார்கள்.

 திருஞானசம்பந்தர் புனல்வாதம் புரிந்து வாகை சூடியதன் மூலம் திருவேடகப்பதி பக்தர்கள் மனதில் சிறப்பிடம் பெற்றிருப்பது போன்று, செய்யாற்றைவென்றான் பதியும் திருஞானசம்பந்தர் அருள் விளக்கப் பதியாக விளங்கிவருகிறது.

 சைவம் தழைக்க தண்ணருள் புரிந்த திருஞானசம்பந்தர் மதுரையினின்றும் தமது யாத்திரையை தொடர்ந்தவராய் மறைசை நகரென வழங்கப்பெறும் திருவோத்தூர் எல்லையை வந்தடைந்தார்.

 அப்போது அனக்காவூரில் வாழ்ந்து வந்த பெருமக்கள் சம்பந்தர் பெருமானை பணிந்து வரவேற்கும் பெரும்பேறு பெற்றவர்களானார்கள். திருவோத்தூர் அந்தனர்கள் பொற்குடம் ஏந்த, ஐங்கருவிகள் இசைக்க, அன்பர்கள் பலரும் எதிர்கொண்டழைக்க எழுந்தருளிய சம்பந்தர் வேதநாயகனை அன்னை இளமுலைநாயகியை வழிபட்ட பின்னர் சேயாற்றின் தென்கரையில் இருந்த திருமடத்தில் தங்கியிருந்தார்.

 அப்போது திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த சமணர்கள் மருண்டனர். புனதகையில் பள்ளி அமைத்துக் கொண்டு தங்கியிருந்த தங்கள் குருவுடன் ஆலோசனை செய்தனர். திருஞானசம்பந்தருக்கு எதிரான கொடுஞ்செயல்களை எண்ணி திட்டமிட்டனர். அபிசார வேள்வியொன்று தொடங்கி வேள்வியிலிருந்து பல்தலைநாகம் ஒன்றை வெளிப்படுத்தி, சம்பந்தர்பால் ஏவினர். கண்களிலும், மூச்சிலும் கனல் தெரிக்கச் சீறிவந்த விடநாகத்தை வேந்தன் திருமனைக்கே ஏகுக எனத் திருஞானசம்பந்தர் பணித்தார். மன்னன் அரண்மனையை அடைந்த வெவ்விட நாகத்தால் சேனைகளும், பலரும் பெருந்துன்பமடைந்தனர். அரசன் சம்பந்தரைச் சரணடைந்தான். 'ஆளுடைய பிள்ளையார் படஅரவப்பணி பூண்ட புனிதர் திருவெண்ணீறு அணிந்தால் உற்ற தீங்கு விலகும்' என உபதேசித்து திருநீறு வழங்கினார். அரசனும், அடியார்களும் பெற்றுத் தரித்துக் கொண்டனர். ஈசன் பாம்பாட்டிச் சித்தராக வேடம் கொண்டு அரவத்தை பிடித்துக் கொண்டு திருக்கோயில் புகுந்தார். சித்தர் திருவுருக்கரந்து லிங்கத் திருமேனியாகி நாகேசுவரர் எனும் நாமம் பூண்டார். இந்த தனிமூர்த்திக்கு வாளரவம் குடையானது.

 சமணர்கள் தொடங்கிய அனல்வாதத்தில் சமணர் தலைவன் சமணமந்திரம் எழுதித் தந்த ஓலையும், திருஞானசம்பந்தரது தமிழ்மறை பொறித்த ஏடும் அனலில் இடப்பட்டன.

பொன்னுருகும் வெப்ப நிலைவரும்வரை துருத்திக் கொண்டு ஊதினர். பின்னர் தனலைப் பிரித்துப் பார்த்தனர். சமணர் இட்ட ஏடு மூலமே இல்லாது சாம்பலாகி இருக்க கண்டனர். சம்பந்தர் பெருமானருளிய ஏடு பசுமையாகவே இருக்கக் கண்டார்கள். சமணர் உள்ளம் வெதும்பினார்கள். தன் முனைப்பு கொண்டவர்களாக புனல்வாதம் செய்ய முனைந்தனர்.

வேந்தன் முதலானவரோடு சமணர்கள் சேயாறு நதிக்கரை வந்து சேர்ந்தனர். சமணர்கள் தங்களது மந்திரம் தீட்டப்பட்ட ஓலையை வேந்தனிடம் கொடுத்தனர். திருஞானசம்பந்தரும் ஒரு ஓலையில் "கார் அமண் கலிங்கத்..." எனத் தொடங்கும் தமிழ்மாமறையை பொறித்து வேந்தனிடம் சேர்பித்தார். அரசன் சமணர் தந்த ஓலையை ஓடும் நீர்பெருக்கில் இட்டார். அவ்வோலை ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. அது கண்ட சமணர்கள் திகைத்தனர்.

 பின்னர் திருஞானசம்பந்தர் தந்த ஏட்டினை நீரில் இட்டான். அவ்வேடு புது வெள்ளங்கண்டு எதிர்நோக்கிச் செல்லும் மீன்போல நீர்பெருக்கை எதிர்த்துச் சென்றது. பலரும் ஏடு செல்லும் திசையில் பின் தொடர்ந்து சென்றனர். அப்புனித ஏடு அகத்தியர் வழிபட்ட அகத்தீசர் திருக்கோயில் அருகே கரை ஒதுங்கியது. நீர்பெருக்கின் எதிர்சென்று ஏடு அடைந்த பதியானது அற்புதம் நடந்த அந்த நாள் முதல் செய்யாற்றை வென்றான் என்னும் பெயரால் வழங்கிவருகிறது.


அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×