தில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு
	


		
 
	
 
6:54:56 AM         Thursday, August 06, 2020

தில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு

Product Code: தில்லை திருபெருந்துறை - சிதம்பரம் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் தில்லை நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் இத்தலம் அமைந்துள்ளது

சுவாமி : ஆத்மநாதர்

அம்பிகை : யோகாம்பாள்

தீர்த்தம் : 

திருத்தல வரலாறு : மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். புதுக்கோட்டையிலுள்ள திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், பரிகளை நரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார்.

 மாணிக்கவாசகர் ஒருமுறை சிதம்பரம் வந்த போது, முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும் திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்கமுடியவில்லை. எனவே இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம் தில்லை திருப்பெருந்துறை என்றழைக்கப்பட்டது.

 மாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது சிவபெருமான் அடியார் வேடத்தில் வந்து அவரது பாடல்களைக் கேட்க விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் எழுதப்பட்டது என எழுதி திருச்சிற்றம்பலம் உடையார் என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர் இவரே இதற்கான பொருள் என்று சொல்லி அவருடன் இரண்டுறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சந்நிதி முகப்பில் சிவன் அடியார் வடிவில் காட்சி அளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.

குருவடிவம் : இத்தலத்தில் மூலத்தானத்தில் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த லிங்கம் முழுமையானதாக இல்லை. அம்பாள் சன்னதியில் பாதம் மட்டும் இருக்கிறது. சிவனுக்கு புழுங்கல் அரிசி சாத ஆவி, பாகற்காய் நிவேதனம் செய்கின்றனர். மாணிக்கவாசகர் சின்முத்திரை காட்டி குரு அம்சத்துடன் காட்சி அளிக்கிறார். பொதுவாக எல்லா தலங்களிலும் நின்ற நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர் இங்கே உட்கார்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

 மாணிக்கவாசகர் குருபூசையன்று ஆத்மநாத சுவாமிக்கு விஷேச பூசை நடைபெறும். அன்று மதியம் மாணிக்கவாசகர் ஆத்மநாதர் சந்நதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டுறகலக்கும் வைபவம் நடைபெறும்.

நடராஜர் நடனத்தை தரிசிக்க வந்த வியாக்ரபாதர் சிதம்பரத்தில் தங்கியிருந்தார். அவரது குழந்தை உபமன்யு பசியால் பால் வேண்டி அழுதான். சிவன் அவனுக்காக பாற்கடலை இங்கு பொங்கச் செய்து அருளினார். பாற்கடல் தீர்த்தம் எனப்படும் இத்தீர்த்தத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை திருப்பாற்கடல் என்றும் வழங்குகின்றனர்.

கோயில் முன்மண்டபத்தில் யோக நிலையில் தட்சிணாமூர்ததி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மூவரும் லிங்கத்தின் பாண வடிவில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு. யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×