சொக்கிகுளம் 

	


		
 
	
 
1:46:07 PM         Friday, May 14, 2021

சொக்கிகுளம்

Product Code: சொக்கிகுளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                            சொக்கிகுளம், சோமலிங்கேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை  மாவட்டத்தில் மதுரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் : சோமலிங்கேசுவரர்

தல சிறப்புகள் :  இங்குள்ள உற்சவரை திருப்பதியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  சிவனின் ஆவுடை வடக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இக்கோயிலில் பெருமாளுக்கும் சன்னதி அமைந்துள்ளது. சிவனும் பெருமாளும் சேர்ந்து சிவ பெருமாளாகக் காட்சியளிக்கின்றனர். திருப்பதி பெருமாளின் தோற்றத்தைப் போல பெருமாள் காணப்படுகிறார். 

பிரதோஷ நாட்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. பிரதோஷ நாட்களில் சிவனுக்கும், புரட்டாசி நாட்களில் பெருமாளுக்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. மூலவர் சிவனாக இருந்தபோதிலும் விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்கு சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன. பிரதோஷ நாட்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம், மாவுகாப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு பஜனைகள் நடத்தப்படுகிறது. சிவனுக்கு செய்யும் அத்துணை பூஜைகளும் பெருமாளுக்கும் செய்யப்படுவது, இந்த கோயிலில் மட்டும்தான். 

காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×