யாழ்ப்பாணம்





	


	



























	




 




	








 




12:49:16 PM         Friday, May 14, 2021

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
Product Code: யாழ்ப்பாணம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               யாழ்ப்பாணம்,  நகுலேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ளது.
இறைவன் : நகுலேஸ்வரப் பெருமான்
இறைவி  :  நகுலாம்பிகை 
தல தீர்த்தம் : கீரிமலை
தல விருட்சம் :   கல்லால மரம் 
தல சிறப்புகள் : மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழமன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.

தல வரலாறு : மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான். அவ் வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றுள்ளது. 9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்தத்தின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயும் தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம்.
இலங்கைத் தீவின் சகல திசைகளில் இருந்தும், தென் இந்தியாவிலிருந்தும் மக்கள் தல யாத்திரையாக இக் கோயிலுக்கு வந்தார்கள். மேலும், இத் திருக்கோயில் சமுத்திரக் கரையில் அமைந்திருப்பதால், நீத்தார் கடமைகளான அந்தியேட்டி, திவசம், சபிண்டீகரணம், அஸ்தி சஞ்சயனம் முதலிய கிரியைகளுக்குச் சிறப்பாகவுள்ள புண்ணியத்தலமாகவும் விளங்குகின்றது. முற்காலத்திலே, நகுல முனிஎன்னும் ஒரு முனிவர் இருந்தார். அவரது முகம் கீரியின் முகத்தைப்போன்று காட்சியளித்ததால், மக்கள் யாவரும் அவரைப் பழித்ததுடன், யாரும் அவருடன் பேசவும் அஞ்சினார்கள். மக்களின் பழிப்புக்கு அஞ்சி, உலகையே வெறுத்த ஒரு துறவியாகி, ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவர் அப் பகுதியிலுள்ள மலைச் சாரலிலே சில காலம் தங்கியிருந்து, தீர்த்தமாடி வந்தபோது, இறைவன் அருளாலும், அந்தத் தீர்த்தத்தின் மகிமையாலும் அவரது கீரி முகம் நீங்கி, இயல்பான மனித முகம் அவருக்கு உண்டானது.அதனால், அந்தத் தலமும், அந்தக் கடற்கரைத் தீர்த்தமும் தெய்வீக அருள் பெற்றவை என்பதை உணர்ந்த அந்த முனிவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கித் தவம் புரியத் தீர்மானித்தார்.
அவருக்கு, அந்தத் தலத்திலே கீரி முகம் மாறியதால், அந்தத் தலத்துக்குக் கீரிமலை என்று பெயர் உண்டாயிற்று. அந்த முனிவரின் தெய்வீகமான புகழ் ஊரெங்கும் பரவியது. அவரை வணங்கி, அவரது ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, திரளான பக்தர்கள் அங்கே வந்து, கீரிமலைத் தீர்த்த்தத்தில் நீராடி, அவரை வழிபட ஆரம்பித்தார்கள். அதைக்கண்டு, அவ்வூர் அரசன் மக்கள் வழிபடுவதற்கு உகந்ததொரு அழகான சிவன் கோயிலை அங்கே கட்டுவித்தான். அந்தக் கோயிலின் ஈஸ்வரன் திருத்தம்பலேஸ்வரர் என்றும், அம்பாள் திருத்தம்பலேஸ்வரியம்பாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். 
கோவில் அமைப்பு : ஆதி காலத்து நகுலேஸ்வரத்திலே, மூன்று பிராகாரங்களும், ஐந்து கோபுரங்களும் இருந்தன என்பது ஐதீகம். கி.பி.1681 ஆண்டிலே, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், நகுலேஸ்வரம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முதலிய ஏராளமான இந்துத் திருக்கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். அங்கிருந்த விலையுயர்ந்த பூஜைக்குரிய பொருட்களையும், வழிபாட்டுப் பொருட்களையும் கொள்ளையடித்தனர். அக்காலத்தில், கீரிமலை நகுலேஸ்வரர்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பரசுபாணி ஐயர் என்பவர், கீரிமலைத் தலத்திலிருந்த ஆலயங்களின் விக்கிரகங்களையும், பூஜைக்குரிய பாத்திரங்களையும் ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்தார். இவ்வாறு பலரும், இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, இறைவனுக்குரிய பக்திப் பொருட்களை அன்னியர்கள் கைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக அவற்றை மண்ணில் புதைத்ததாகவும், ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்ததாகவும் வரலாற்று ஏடுகள் உரைக்கின்றன.  அவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட விக்கிரகங்களில் சில, மண்ணைத் தோண்டும்போது அல்லது கிணறுகளைத் தூர் வாரும்போது கிடைக்கப்பெற்று, மீண்டும் கோயில் கண்டன. ஆனால், கீரிமலைச் சிவன் கோயிலுக்குரிய விக்கிரகங்களும், பூஜைப் பொருட்களும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. கீரிமலைச் சிவன் கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், கோபுர வாயில், பரிவாரத் தேவர் சந்நிதிகள், பிராகாரம் எனும் அமைப்புகளுடன், சிவாகம விதிகளுக்கும், சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமைய உருவாக்கப்பட்டு உள்ளது.
இங்கு, ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் ஒரே லிங்கத்தில் அமைக்கப்பெற்ற சகரலிங்கம் காட்சியளிக்கின்றது. கருவறையில் இலங்கையின் பெரிய சிவலிங்கத் திருமேனியராக ஐந்தரை அடி உயர நகுலேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அருளுகிறார். கருவறைச் சுற்றில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர் அமர்ந்துள்ளனர். சண்டிகேஸ்வரர் தனிச் சன்னிதி கொண்டுள்ளார். தெற்கு வாசலில் அன்னை நகுலாம்பிகை அம்பாள், நின்ற கோலத்தில் கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் கொண்டும் அருள்காட்சி தருகின்றாள். பஞ்சலிங்கம், ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு, சரபேஸ்வரர், மகாலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத சண்முகர் சன்னிதிகளும் அமைந்துள்ளன. உள்பிரகாரத்தில் உற்சவமூர்த்திகள் அறை அமைந் துள்ளது. இதில் விநாயகர், பிரதோஷ மூர்த்தி, இலங்கையின் பெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் தனி அறையிலும், வழக்கத்திற்கு மாறாக கூப்பிய செஞ்சடையோடு காட்சிதரும் அபூர்வ நடராஜர் மகா   மண்டபத்தின் தனிச்சன்னிதியிலும் வீற்றிருக்கின்றனர்.
இத்தலத்தின் சிறப்பே தீர்த்தம் தான். பகீரதனின் முயற்சியால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட கங்கையின் துளிகள், இம்மண்ணில் விழ, அது புனித தீர்த்தமானது. பரமசிவன் பார்வதிக்காக உருவாக்கிய தீர்த்தம் இது என்றும் கூறுவார்கள். கீரிமலைத் தீர்த்தம், கண்டகித் தீர்த்தம், சாகர தீர்த்தம் என பலவாறு இந்தத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. நகுலமுனிவர் கீரி முகம் நீங்கியது, சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் நீங்கியது என பெருமை வாய்ந்த தீர்த்தம் இது. மாசிமகம், மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை நாட்களில் பஞ்சமூர்த்திகள், மாவைக்கந்தன் எழுந்தருள்வார்கள். ஆகையால்தான் இந்த தீர்த்தம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான மகத்துவம் பெற்று விளங்குகின்றது.
நவராத்திரி விழாவும், மானம்பூ விழாவும் அங்கே சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சித்திரைப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணி மூலம், மானம்பூ, புரட்டாசிச் சனி வாரம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாயில் ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம் முதலான தினங்களில் சிறப்பான உற்சவங்கள் நடைபெறும். ஆடி அமாவாசை நாளில், பக்தர்கள் பெருங் கூட்டமாக வந்து தீர்த்தமாடி இறைவனைத் தரிசனம் செய்வார்கள். கீரிமலைச் சிவன் கோயிலில் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத்தில் நடைபெறும். சிவராத்திரி அமாவாசையன்று, தீர்த்த உற்சவம் நடைபெறும். அம்மன் கோயிலில், பங்குனி மாதத்திலே கொடியேற்றத் திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பன்று, தேர்த் திருவிழாவும், தீர்த்தமும் நடைபெறும்.
காலை 5.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
அருகிலுள்ள விமானதளம் :   யாழ்ப்பாணம்
அருகிலுள்ள  ரயில் நிலையம்   :   யாழ்ப்பாணம்
பேருந்து  வசதி   : உண்டு
தங்கும் வசதி   :  உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×