கொரநாட்டுக்கருப்பூர்

	


		
 
	
 
5:46:42 AM         Monday, March 08, 2021

கொரநாட்டுக்கருப்பூர்

கொரநாட்டுக்கருப்பூர்
கொரநாட்டுக்கருப்பூர் கொரநாட்டுக்கருப்பூர் கொரநாட்டுக்கருப்பூர் கொரநாட்டுக்கருப்பூர் கொரநாட்டுக்கருப்பூர் கொரநாட்டுக்கருப்பூர்
Product Code: கொரநாட்டுக்கருப்பூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               கொரநாட்டுக்கருப்பூர்,  சுந்தரேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் சென்னை சாலையில் கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன் : சுந்தரேஸ்வரர், சுந்தரர், லோகசுந்தரர்
இறைவி  :  அபிராமி

தல வரலாறு : புராணக் காலத்தில் கொரநாட்டுக் கருப்பூர் என்ற இவ்வூர் திருப்பாடலவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. கொரநாட்டுக்கருப்பூர் என்றும் அழைக்கப்படும் இவ்வூரில் தலவிருட்சமான பாதிரி மரங்கள் அதிகமாக இருந்ததால் திருப்பாடலவனம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. 

ஒரு சில 100 ஆண்டுகளுக்கு முன் காவிரியில் வெள்ளம் வந்தபோது ஒரு பெட்டி கரையில் ஒதுங்கியது. அதில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு காளியின் பாதி சிலை பகுதி இருந்தது. அச்சிலையை என்ன செய்வது என ஊர் மக்கள் சிந்தித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள், காளியை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி ஒரு ஓலை குடிசையில் வைத்து பூஜை செய்தனர். அந்த குடிசை ஒருநாள் திடீரென தீப்பிடித்தபோது மக்கள் அந்த பெட்டியை காப்பாற்றி சுந்தரேஸ்வரர் கோயிலில் வளாகத்தில் வைத்து வழிபாடு நடத்த துவங்கினர். இடுப்புக்கு மேல் உருவத்துடன் 8 கரங்கள் கொண்ட இக்காளியின் வலது நான்கு கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளியும், இடது நான்கு கரங்களில் பாசம், கேடயம், மணி மற்றும் கபாலமும் ஏந்தியும் காணப்படுகின்றன. இந்த காளிக்கு சாத்தப்படும் பூ, குங்குமம் போன்றவை பிரசாதங்களாக வழங்கப்படுவதில்லை.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ராஜகோபுரத்தில் இடி, மின்னல் தாக்கக்கூடாது என்பதற்காக பல லட்ச ரூபாய் செலவில் இரும்பு மற்றும் பித்தளை, செம்பினாலான 10 அடி உயரத்தில் இடிதாங்கி வைத்தனர். ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாததால் காற்று மற்றும் மழையால் இடிதாங்கியின் கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கி துருபிடித்து கீழே சாய்ந்தது. தற்போது கோயிலின் கோபுரத்தின் மேல் ஆபத்தான நிலையில் இடிதாங்கி தொங்கி கொண்டிருப்பதால் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த இடிதாங்கி கீழே விழுநதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது

கோயில் அமைப்பு : கோயிலின் முகப்பில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கருவறையில் சிவலிங்கத்திருமேனியாக உள்ள இறைவன், கீழ்திசை நோக்கி உள்ளார். இறைவியின் சன்னிதி தென்திசை நோக்கி அமைந்துள்ளது. முதல் பிரகாரத்தில் வாகன மண்டபமும், மடப்பள்ளியும், திருமாளிகைப் பத்தியும், வடகிழக்கு ஈசானிய மூலையில் யாகசாலையும், தென் மேற்கில் கருவறையும் அமைந்துள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், சப்தமாதர்கள், லட்சுமி, துர்க்கை ஆகியோருடைய சிற்பங்கள் காணப்படுகின்றன. வடபுறத்தில் நடராஜர், பைரவர் மற்றும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். கோயிலின் இடப்புறம் அபிராமி அம்மன் சன்னதி உள்ளது.

இக்கோயில் வளாகத்தில் மூலவர் கருவறைக்கு இடப்புறம் உள்ள பகுதியில் பெட்டி காளியம்மன் கோயில் என்றழைக்கப்படும் சுந்தரமகாகாளியின் சன்னதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் திறந்த நிலையில் உள்ள, லிங்கத்திருமேனியைக் கொண்ட அகத்தீசுவரர் கோயில் என்ற மற்றொரு சிவன் கோயில் உள்ளது. கொரநாட்டுகருப்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுந்தரரேஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயில் வளாகத்தில் பெட்டி காளியம்மன் எனப்படும் சுந்தர மகாகாளியம்மன், மூலவர் சன்னதிக்கு அருகில் அம்மன் சன்னிதியின் கிழக்கில் சுந்தர மகாகாளியின் பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் சுந்தர மகாகாளியின் இடுப்புக்கு மேற்பட்ட திருமேனி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டி எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். இந்த பெட்டியையே மூலவராக பாவித்து மாலையிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வருகின்றனர். சித்திரை மாதம் பெட்டிக்காளி வீதியுலா உற்சவம் நடக்கிறது.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  கும்பகோணம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×