சின்னமனுர்

	


		
 
	
 
5:37:01 AM         Monday, March 08, 2021

சின்னமனுர்

சின்னமனுர்
சின்னமனுர் சின்னமனுர் சின்னமனுர் சின்னமனுர் சின்னமனுர் சின்னமனுர்
Product Code: சின்னமனுர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                           சின்னமனுர், பூலாநந்திஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தேனி மாவட்டத்தில் தேனியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. 

இறைவன் : பூலாநந்தீஸ்வரர் 

இறைவி  :  சிவகாமி

தல தீர்த்தம் : சுரபி தீர்த்தம் 

தல விருட்சம் :  பூலா மரம்

தல சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இலிங்கம் வெட்டுப் பட்ட நிலையில் உள்ளது. இங்கிருக்கும் அம்மனுக்கு முகம் எப்பொழும் வியர்த்துக் கொண்டே இருக்கிறது. அர்ச்சகர்கள் எவ்வளவோ தடவை அம்மனுக்கு அலங்காரங்கள் செய்தாலும் முகம் மட்டும் வியர்த்தபடியே இருப்பது அதிசயம். அதேபோல் இங்குள்ள மரத்தில் நாகலிங்க பூ பூக்கிறது. இப்பூவில் நடுவில் இலிங்கம் போன்றும் அதற்கு ஆதிசேசன் போல் குடையாக இலிங்கத்தின் மீது இருப்பது அதிசயமாக உள்ளது. பார்க்கிறவர்களின் பார்வை எந்த உயரமோ அதே அளவு உயரமாக இலிங்கம் காட்சி தரும் அதிசயத்தை காணலாம். முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்.

தல வரலாறு : ராணி மங்கம்மாள் காலத்தில்  சின்னமநாயக்கர் என்ற அரசியல் அதிகாரி உருவாக்கியதால் அவர் பெயரால்  சின்னமனூர் என பெயர் பெற்றது இந்த ஊர்.  புராணத்தில் இந்த ஊர் ‘அரிகேசரிநல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் முக்தி  கொடுக்கும் தலங்கள் ஐந்து. அவை காசி, திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர் மற்றும் அரிகேசரிநல்லூர் என்ற இந்த சின்னமனூர்.

பழங்காலத்தில் இந்த பகுதிக்கு ‘அள நாடு’ என அழைக்கப்பட்டது. இதன் தலைநகரமாக வீரபாண்டி இருந்தது. மன்னர் ராஜசிங்க பாண்டியன் ஆண்டு வந்தான். அவனின் அரண்மனையில் பணிசெய்த ஒருவர் தினமும் பாலுடன் இந்த காட்டு பகுதி வழியாக வருவது வழக்கம். ஆனால் சில நாட்களாக அந்த வழியாக வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூலா மரத்தின் வேர் தடுக்கி கீழே தள்ளிக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடரவே மன்னனிடம் இது குறித்து தெரிவித்தான். பணியாளரின் கூறியதை கேட்ட மன்னன் உடனே அந்த இடத்தை தோண்டிப் பாருங்கள் என உத்தரவிட்டார். அப்போது அங்கு தென்பட்ட ஒரு லிங்கத்திலிருந்து கிளம்பிய ஜோதி விண்ணுக்கும் மண்ணுக்கும் வரளரத் தொடங்கியது. சிவ லிங்கத்தை தரிசித்த ராஜசிங்க பாண்டியன், ஈசனே தயவு செய்து என் உயரத்திற்கு ஏற்ற அளவுடன் நேரில் காட்சி தந்து அருளுங்கள் என வேண்டுக் கொண்டான்.

உடனே மன்னனின் அளவிற்கு மாறிய அந்த சிவ லிங்கத்தைப் பார்த்து வியந்து, ‘அளவுக்கு அளவானவரே’ என புகழ்ந்தார். மன்னன் சுவாமியின் மார்பில் தன் முகம் பதிய கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவித்தார். அன்று முதல் மூலவருக்கு ‘பூலாநந்தீஸ்வரர்’ என பெயர் சூட்டப்பட்டது. தற்போது கூட இந்த திருக்கோயிலில் உள்ள மூலவர் சிலையில் மன்னனின் முகம் பதிந்த நிலையில் இருப்பதை காண முடியும்.

கோவில் அமைப்பு : சிவபெருமானை நிந்தித்து, தக்கன் செய்த யாகத்தில்  பங்கேற்ற வானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். காமதேனுவும்,  கற்பகத்தருவும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டன.  தெய்வீகப் பசுவான  காமதேனுவை நாட்டுப் பசுவாகவும், கற்பகத் தருவை முட்பூலாமரமாகவும்  வீரபத்திரர் சபித்தார். இரண்டும் சாபவிமோசனம் கேட்க, “கற்பகத்தருவே! நீ  முட்பூலாமரமாய் முளைத்த இடத்தில் சிவபெருமான் சுயம்புவாய் தோன்றுவார். உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்றும்,  ”காமதேனுவே! நீ நாட்டுப் பசுவாய் பிறந்து, ஒரு புலியால் உனக்கும்,  உன்னால் புலிக்கும் ஞானம் உண்டாகிட சாபம் நீங்கும்” என்றும் அருளினார். இதன்படியே இந்த பூலாநந்தீஸ்வரர் கோயில் பகுதியில் காமதேனுவும், கற்பகத்தருவும் விமோசனம் பெற்றன. வீரபாண்டியை தலைநகராக கொண்டு ஆண்ட ராசசிங்க பாண்டியன் எனும் அரசன், விமோசனம் அருளிய இத்தலத்தில் பின்னாளில் கட்டியதே இக்கோயில். பூலாநந்தீஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் கொடிமரம், அடுத்து நந்தி பகவான், அடுத்து மண்டபம், தொடர்ந்து சன்னதி என கோயில் அழகுற கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலின் இடதுபுறம் சிவகாமி  அம்மன் கோயிலும் உள்ளது. கோயில் வளாகத்தில் சந்திரசேகரர், காங்காளர்,  சுப்பிரமணிய சுவாமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, காளி, பைரவர் போன்ற துணை  தெய்வங்களும் காட்சி தருகின்றனர். கோயிலின் வலதுபுறம்  நவக்கிரகங்கள் உள்ளன. கோயில் கிழக்குப் பகுதியில் திருமால்  வேண்டுகோளுக்காக சிவபெருமான் உருவாக்கிய சிவகங்கைத் தீர்த்தம் எனப்படும்  குளம் உள்ளது.  இந்த திருக்கோயிலில் நடராஜர், சிவகாமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இத்தல விநாயகர் கற்பகவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவ்வூரில் பிறப்பவர்களுக்கு முக்தி தரும் சிறப்புடைய சிவதலம். இவ்வூரில் இறப்பவர்களின் எலும்புகள் சுரபி நதியில் விழுந்தால் கல்லாக மாறும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் பாவங்கள் விலகி பேரின்பம் அடையலம். தவிர குழந்தை வரம், திருமண வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் அபிசேகங்கள், அம்பாளுக்கு புடவை சாத்துதல், பொங்கல் படைத்து விநியோகித்தல் ஆகியவை முக்கிய நேர்த்தி கடன்களாகும்.

பூலாநந்தீஸ்வரர் கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடந்து வருகின்றன.  ஆண்டுதோறும் சித்திரையில் 15 நாட்கள் தீர்த்தவாரி சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. வைகாசி விசாக நட்சத்திரத்தன்று முருகன் பால்குட விழா, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் முளைக்கொட்டுத் திருநாள், அம்மன் தபசு, ஆவணியில் புட்டுத் திருவிழா, விறகு விற்றல் லீலை, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்த சஷ்டி, கார்த்திகையில் திருக்கார்த்திகை, மார்கழியில் ஆரூத்ரா தரிசனம், படியளத்தல், தையில் தீர்த்தவாரி, தைப்பூசத் தெப்பத் திருவிழா, மாசியில் மகாசிவராத்திரி மற்றும் பங்குனியில் பங்குனி உத்திரம் என மாதந்தோறும் விழாக்கள் களை கட்டுகின்றன. இவை  தவிர 63 நாயன்மார்களுக்கும் அவர்களது நட்சத்திர நாளில் சிறப்பு  வழிபாடுகளும் நடக்கின்றன.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  மதுரை,  தேனி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×