ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர்

	


		
 
	
 
7:25:24 AM         Thursday, February 25, 2021

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர்

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர்
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர்
Product Code: ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                      ஸ்ரீவைகுண்டம், கைலாசநாதர் 

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் தாமிரபரணி வட கரையில் இக்கோயில் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவன் : ஸ்ரீ கைலாச நாதர்

இறைவி : ஸ்ரீசிவகாமி

தல தீர்த்தம் : தாமிரபரணி 

தல விருட்சம் : இலுப்பை

தல சிறப்புகள் : இங்குள்ள சிவன் சனி கிரகத்தின் ஆட்சி பெற்ற திருத்தலமாகும். சனிதிசை காலத்தில் பரிகாரம் செய்து சிறந்த பயன்கள் பெற இத்திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். நவதிருப்பதிகளில் சூரியன் வணங்கும் வைகுண்டநாதர் திருக்கோவிலும் இவ்வூரில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்றும் நவகைலாயத்தில் ஒன்றும் ஒரேயிடத்தில் அமைந்த திருத்தலம் இதுவாகும். ஐந்து வயது வரை வாய்பேசாது ஊமையாயிருந்து பின்னர்,திருச்செந்தூர் முருகன் அருள் பெற்று பாடும் அருள் பெற்ற ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் பிறந்த ஊர் இதுவாகும். இவர் பூலோக வைகுண்டமாகவும் , பூலோக கைலாயமாகவும் இவ்வூர் திகழ்ந்ததாகத் தமது கைலைக்கலம்பகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோயில் அமைப்பு : இக்கோவில் நந்தவனத்தில் வெள்ளெருக்கு மகாவில்வம், விபூதி இலை மரங்கள், நெல்லி மரங்கள் உள்ளன. இக்கோவிலில் கைலாயநாதர் சந்நிதிக்கு வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும்,விசாலாட்சி அம்மையும் உள்ளனர். அம்மை அப்பன் நால்வருடைய கருவறைகளின் மீது அழகிய விமானங்கள் உள்ளன. இக்கோயிலிலுள்ள பூதநாதர் வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். இவர் மக்களின் காவல் தெய்வமாகவும்,கோவிலின் காவல் தெய்வமாகவும், சாஸ்தாவாகவும் போற்றப்படுகிறார். கோவில் திருவிழாவின் போது இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் இருவரும் காவல் தெய்வங்களாக உள்ளனர்.

கோவிலின் உள்ளே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உட்புற கூரையில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும் , படங்களும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் உரோமச முனிவர் உருவம் உள்ளது. இத்திருக்கோயிலை வழிபடுவது காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும். ஸ்ரீவைகுண்டநாதர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை நவதிருப்பதி தலங்களாகும். திருவேங்கமுடையார் மண்டபத்தில் உள்ள சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி நாட்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெறும். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் கோயில் நவகைலாயங்களில் ஒன்றாகும். இறைவனுக்கு எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டுக் கைவிடப்பட்டு அரைகுறையாக நிற்கிறது. இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம்.

தல வரலாறு : ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் அருகிலுள்ள திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். முருகன் இவர் முன் தோன்றி ஒரு மலரைக் காட்ட உடன் பூமேவு செங்கமல என்று துவங்கும் கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ விரும்பினார். அதற்கு நிலம் தந்து உதவி செய்ய வேண்டி தில்லி சுல்தானை அணுகினார். அவரிடம் பேச இந்தி மொழி அறிவு தேவைப்பட்டது. கலைவாணியைக் குறித்துப் பத்துப் பாடல்கள் அடங்கிய சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார்.

இக்கோவிலில் விரைவில் திருமணம் நடைபெறவும் , இழந்த சொத்துக்களை மீண்டும் பெறவும் , மக்கள் பரிகார பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

காலை 7.00 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகில் உள்ள விமான நிலையம் : தூத்துக்குடி, மதுரை

அருகில் உள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவைகுண்டம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×