பாலக்கரை

	


		
 
	
 
7:49:10 AM         Thursday, February 25, 2021

பாலக்கரை

பாலக்கரை
பாலக்கரை பாலக்கரை பாலக்கரை பாலக்கரை பாலக்கரை பாலக்கரை பாலக்கரை பாலக்கரை
Product Code: பாலக்கரை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                      பாலக்கரை,  வெளிகண்ட நாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பாலக்கரையில் உள்ளது.

இறைவன் : வெளிகண்ட நாதர்

இறைவி  :  சுந்தரவல்லி

தல சிறப்புகள் : சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் தலம்.

கோவில் அமைப்பு :  சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  கோவில். ஐந்து நாதர்கள் திருச்சிராப்பள்ளி நகரின்  கிழக்கில் கயிலாச நாதர் ஆலயம், வடக்கில் பூலோக நாதர் ஆலயம், மேற்கில் நாகநாதர் ஆலயம் மற்றும் காசி விசுவநாதர் ஆலயம், தெற்கில் வெளிகண்ட நாதர் ஆலயம் என ஐந்து ஆலயங்கள் நகரை அலங்கரிக்கின்றன.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி இருந்தாலும், நுழைவு வாசல் தெற்குப் பக்கம் அமைந்துள்ளது. உய்யக் கொண்டான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சுமார் 1000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தின் பழமை, நம் மனதில் நம்மையும் அறியாமல் ஒரு அற்புத பக்தியையும் பரவசத்தையும் ஊற்றெடுக்க வைப்பது நிஜம். ஆலய முகப்பில் மகாமண்டபமும், அதன் நடுவே நந்தியம் பெருமாளும், பலி பீடமும், கொடி மேடையும் உள்ளன. மகா மண்டபத்தின் இடது புறம் கருடாழ்வார் திருமேனியும், சமயக் குரவர்கள் நால்வர்களின் திருமேனிகள் கொலுவிருக்கும் மண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தில் வலது புறம் அன்னை சுந்தரவல்லியின் சன்னிதி உள்ளது. இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மகாமண்டபத்தை அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்புரிகின்றனர். அன்னையை அடுத்து சீனிவாசபெருமாள், தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனி மண்டபத்தில் சேவை சாதிக்கிறார். அடுத்துள்ள வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் தேவக்கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது.  வடதிசையில் பிரம்மாவின் திருமேனியும், துர்க்கையின் திருமேனியும் உள்ளன. 

 

குருப் பெயர்ச்சி நாட்களில் தட்சிணா மூர்த்திக்கு நடக்கும் சிறப்பு ஆராதனைகளைக் காண பக்தர்கள் கூட்டமாக வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு கன்னியர் எலுமிச்சைப்பழ விளக்கேற்றி நல்ல கணவனைப் பெற வேண்டுவதும் அவர்கள் பிரார்த்தனை பலிப்பதும் உண்மையே என்கின்றனர் பக்தர்கள். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு ஆரா தனையும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் தங்களைப் பீடித்துள்ள பில்லி, சூனியம் விலகும் என்றும் வியாபாரம் அபிவிருத்தி ஆகும் என்றும் நம்புகின்றனர் பக்தர்கள். கிழக்கில் சூரியன், சனீஸ்வரன் நாகர் திரு மேனிகள் உள்ளன. பிரதோஷம், மாதப் பவுர்ணமிகள், சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இறைவனின் கருணைப் பார்வையைப் பெற்று பலன் பெறுகின்றனர். இங்கு உற்சவர் திருமேனி இல்லை. எனவே வீதியுலா கிடையாது. தினசரி இரண்டு கால பூஜை நடக்கும்.

திருமணத் தடை நீங்கவும் தங்களது மகன் அல்லது மகளுக்கு விரைந்து திருமணம் நடந்தேறவும் இங்கு இறைவன் இறைவிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கின்றனர். அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவதுடன் அவர்கள் வீட்டு திருமணம் மங்கலகரமாக விரைந்து நடந்தேறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. செய்வினை கோளாறு இருப்பதாக நினைப்பவர்கள் இங்கு வந்து இறைவன், இறைவியிடம் மனமுருக வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது.

காலை 9.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருச்சிராப்பள்ளி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×