பேட்டைவாய்த்தலை





	


	



























	




 




	








 




6:03:07 AM         Monday, March 08, 2021

பேட்டைவாய்த்தலை

பேட்டைவாய்த்தலை
பேட்டைவாய்த்தலை பேட்டைவாய்த்தலை பேட்டைவாய்த்தலை பேட்டைவாய்த்தலை பேட்டைவாய்த்தலை பேட்டைவாய்த்தலை பேட்டைவாய்த்தலை
Product Code: பேட்டைவாய்த்தலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                     பேட்டைவாய்த்தலை, மத்யார்ஜுனேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கிமீ தொலைவில் கரூர் சாலையில் உள்ளது.  பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் ஊரினுள் உள்ளது

இறைவன் :  மத்யார்ஜுனேஸ்வரர்

இறைவி  :  பாலாம்பிகை

தல விருட்சம் : வன்னி

தல சிறப்புகள் :  இச்சிவாலயத்தின் மூலவர் கிழக்கு நோக்கி உள்ளார்.  இவ்வூரை பேட்டவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் அழைக்கின்றனர். வாய்த்தலை என்பது தலைவாய் என்பதன் மாறுபெயர் ஆகும். ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்குத் தலைவாய் என்ற பெயர் உண்டு. இவ்விதம் காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலின் தலை இடத்தைக் கொண்டிருப்பதால் இப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

கோயில் அமைப்பு :  ஐந்து நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் உள்ளது. அதனருகே திருமால் இரு மனைவியரோடு காட்சி தருகிறார். கோயில் நீளமான அமைப்பினை உடையது. இராஜகோபுரத்திலிருந்து சிவாலயம் வரை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. அருகிலேயே ஆலய நிர்வாக விற்பனைக் கூடம் உள்ளது.  கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானை உடனுரை ஆறுமுகப் பெருமான், கஜலட்சுமி ஆகியோருக்கான தனிச்சன்னதிகள் உள்ளன. இச்சிவாலயத்தில் மிகத் தொன்மையான திருமால் சிலை உள்ளது. இச்சிவாலயத்தின் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. சண்கேசுவரர் மழு ஆயுதத்தோடு அமர்ந்த நிலையில் உள்ளார். இத்தல விருட்சத்தின் கீழே நாகங்களின் சிலைகள் உள்ளன. வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் நவகிரகங்கள் மற்றும் பைரவர் சன்னதி அமைந்துள்ளது.

பொற்றாள பூவாய் சித்தர் எனும் சித்தர் இக்கோயிலில் உள்ள பாலாம்பிகையை வணங்கி, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய், பிரசவம் போன்ற பிரட்சனைகளைத் தீர்த்துவந்தார். அந்த சித்தரின் பீடம் இச்சிவாலயத்தில் அமைந்துள்ளது. தற்போது கருவரைக்கு முன் உள்ள மகாமண்டபத்தில் உள்ள தூணில் பொற்றாள பூவாய் சித்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தின் அருகே  சீட்டில் குறைகளையும், பிராத்தனைகளையும் எழுதி கட்டி விடும் வழக்கம் உள்ளது. இச்சிவாலயத்தில் எண்ணற்ற கலைநுட்பமான சிற்பங்கள் அமைந்துள்ளன. இராஜகோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தின் தூணில் ஒரு தலை இரு உடல் கொண்ட சிற்பம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி உள்ள மண்டபத்தில் பிரம்மஹத்தி தோசத்திற்கென உருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. கங்காளநாதர் மற்றும் சரஸ்வதி சிலைகள் நடராஜர் சன்னதிக்கு அருகில் உள்ளன.  வேதனையில் வருந்திய பெண்களுக்கு சித்தர் என்னென்னவோ மருந்து தந்தும் பயன் ஏற்படவில்லை. பிறகு இத்தலத்து இறைவி பாலாம் பிகையிடம் சித்தர் மனமுருகி முறையிட்டார்.  அந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்தாள் அன்னை. அதன்படி தனக்காக விரதமிருந்து தன்னை வழிபடும் பெண்களின் பிரச்னைகளும் வேதனையும் தீரும்படியாக அருளினாள். மாதாந்திர சிக்கல் மட்டுமல்லாமல், கருப்பைக் கோளாறுகள் எல்லாமும் நிவர்த்தியாயின. பொற்றாள பூவாய் சித்தர் இந்த ஆலயத்தில் இறைவனுடன் ஜோதி வடிவில் இணைந்துள்ளார்.

தல வரலாறு : சோழ மன்னனான மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிகாலத்தில் எண்ணற்ற போர்கள் நடைபெற்றன. அப்போர்களால் வீரர்களைக் கொன்ற பாவம் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ஏற்பட்டது. அதனால் காவேரி நதியிலிருந்து ஒரு கிளை நதியாக உய்யகொண்டான் ஆறினை வெட்டி, அதன் கரையில் சிவாலயத்தினை அமைத்தார். இச்சிவாலயத்தில் மூலவர் மற்றும் அம்பிகைக்கு தன்னுடைய சோழ மன்னர்கள் கட்டிய கோயிலில் விளங்கும் மூலவர் மற்றும் அம்மன் பெயரை இட்டார். மன்னன் வீரர்களைக் கொன்ற கொலைப்பாவமான பிரம்மகத்தி தோசத்தினை இத்தலத்தின் இறைவன் நீக்கினார்.

செப்டம்பர் 1998இல் கோயிலில் இருந்த அறிவிப்புப்பலகையில் "கோயிலுக்கு முன் தோப்பில் ஒரு சமண விக்கிரக உருவமும், சுமார் 6 அடி உயரமுள்ள மஹாவிஷ்ணு சிற்பமும் உள்ளன" என்ற குறிப்பு காணப்பட்டது. அப்போது கோயிலின் நுழைவாயிலின் எதிரே ஒரு புத்தர் சிலை இருந்தது. பார்ப்பதற்கு சமண தீர்த்தங்கரைரைப் போல இருந்தாலும் அச் சிலை புத்தர் சிலைக்குரிய கூறுகளையே கொண்டிருந்தது அறியப்பட்டது. இப்பகுதியில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றாக இந்த சிலையைக் கருதலாம். 

பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறினமையைத் தீர்க்கவும் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவுதான் இக்கோயிலும் அதனருகே உள்ள தீர்த்தமும். ஆலய கருவறை நிர்மாணம் நிறைவடையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் முழுதும் நீங்கியது. நீண்ட நாட்களாக கிடைக்காதிருந்த குழந்தை பாக்கியமும் கிட்டியது. இச்சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் கோயில் மண்டபத்தில் தென்பகுதியில் உள்ள தூணில் ‘பிரம்மஹத்தி’ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே ஊரில் பொற்றாள பூவாய் சித்தர் என்பவர் வாழ்ந்துள்ளார். அவர் சித்த மருத்துவராகவும் இருந்துள்ளார். அக்காலத்தில் இங்குள்ள பெண்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களுக்கும் மேலாக மாதவிலக்கு ஏற்பட்டுள்ளதாம்.

இறைவன், இறைவியை வழிபட்ட பின்பு பெண்கள் தங்களுக்கான பிரத்யேக பிரச்னைகளை பிரார்த்தனை சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி உள்ள தூணில் கட்டுகின்றனர். அதன் பிறகு இறைவன், இறைவி படத்தை பெற்று 7 முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் உளமாற பூஜைகள் செய்து வருகிறார்கள். அவ்வாறு செய்வதால் தங்களுடைய அந்த வேதனைகள் தீருகின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். 

காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள ரயில்  நிலையம்   :  திருச்சிராப்பள்ளி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×