கூகூர் குஹேஸ்வரர்

	


		
 
	
 
7:26:40 AM         Thursday, February 25, 2021

கூகூர் குஹேஸ்வரர்

கூகூர் குஹேஸ்வரர்
கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர் கூகூர் குஹேஸ்வரர்
Product Code: கூகூர் குஹேஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                      கூகூர்,  குகேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் கூகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 

இறைவன் : குஹேஸ்வரர்

இறைவி : கல்யாணசுந்தரி

தல விருட்சம் : மாமரம்

தல சிறப்புகள் : மூலவர் மேற்கு திசை நோக்கிய நிலையில் உள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டததில் கூகூர் என்ற பெயரில் ஒரு ஊர் உள்ளது. அங்குள்ள கோயில் ஆம்பரவனேஸ்வரர் கோயிலாகும். முருகனுக்குரிய பல்வேறு பெயர்களுள் ஒன்று குகன். முருகப் பெருமான் இங்கு தனது தந்தையான சிவபெருமானை வழிபடுவதால் இத்தல ஈசன், குகேஸ்வரர் என வணங்கப்படுகிறார். 

முற்காலத்தில் இக்கோயிலில் உள்ள தல மரமான மாமரத்தில் வருடத்திற்கு ஒரு மாங்கனி காய்த்ததாகவும் அதனை உண்டு துர்வாச முனிவர் தவம் செய்து வந்துள்ளார். பாண்டவர்கள் திரௌபதையுடன் வழிபாடு செய்ய வந்தபோது அக்கனி மீது ஆசைப்பட, அதை அறிந்த பீமன் அதனைப் பறித்து திரௌபதையிடம் தருகிறார். அதனை உணர்ந்த கிருஷ்ணர் துர்வாசருக்கு அது தெரிந்தால் கோபப்பட்டு விடுவார் என்று உணர்ந்து அக்கனியை அம்மரத்தில் பொருந்தச் செய்தார். ஆதலால் இத்தலத்தை அருந்தமாங்கனி பொருந்திய தலம் என்பர்.

கோயில் அமைப்பு :  இக்கோயிலில் ஆம்பரவனேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதிகளும், நவகிரக உபசன்னதியும் உள்ளன.  மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோயிலின் முகப்பில் உள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், துர்வாசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, கங்காளமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். மங்களாம்பிகை சன்னதி கோயிலின் இடப்புறத்திலும், நவக்கிரக சன்னதி திருச்சுற்றிலும் அமைந்துள்ளன. லிங்க வடிவில் உள்ள மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களின் சன்னதி உள்ளது. கிழக்கில் பைரவரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர்.

குகனுக்கு ஈஸ்வரன் அருளிய தினம் சதய நட்சத்திர நாளாகக் கருதப்படுவதால், இறைவனுக்கு ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திர நாளில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நாளில் இங்குள்ள இறைவன், இறைவியை வழிபடுவதால் பல நற்பலன்கள் கிடைக்கும் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தவறாது வழிபட வேண்டிய கோயில். ராமாயண காலத்தில் இருந்தே சிறப்புடன் திகழும் இத்தலம் மாத சிவராத்திரி நாட்களில் மகரிஷிகளால் வழிபடப்பெற்ற பெருமைக்கும் உரியது. நவராத்திரி, கார்த்திகை, சிவராத்திரி, ஆண்டுப்பிறப்பு, பொங்கல், பௌர்ணமி நாட்களில் விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருச்சிராப்பள்ளி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×