வெள்ளூர்





	


	



























	




 




	








 




12:48:40 PM         Friday, May 14, 2021

வெள்ளூர்

வெள்ளூர்
வெள்ளூர் வெள்ளூர் வெள்ளூர் வெள்ளூர் வெள்ளூர் வெள்ளூர் வெள்ளூர்
Product Code: வெள்ளூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                 வெள்ளூர்,  திருக்காமேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் சாலையில், முசிறிக்கு கிழக்கில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள வெள்ளூரில் அமைந்துள்ளது.

இறைவன் : திருக்காமேஸ்வரர்

இறைவி  :  சிவகாமசுந்தரி

தல சிறப்புகள் : திருக்காமஸ்வரம் கோவில் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் சிறப்பம்சம் மகாலட்சுமி அம்மன் இந்த கோவிலில் சிவ பெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற தலம் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு தரும். வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறாள்.

 

கோவில் அமைப்பு : பழமையும் கட்டிடக்கலையும் கிபி ஆறாம் நூற்றாண்டில் இந்த கோவில் புணரமைக்கப்பட்டுள்ளது. முதலாம் விஜயாதித்த சோழன் காலத்தில் புணரமைக்கப்பட்டது என்று கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன ஆனால், இதைக் கட்டியவர் யார் என்பது தெரியவில்லை. ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிரகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னிதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.

வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெள்ளூர் எனப்பெயர்பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.

கிழக்குப் பார்த்த ஆலயம். மொட்டை கோபுர வாசல்; அருகே அரசமரமும் வேப்பமரமும் இருக்க, ஸ்ரீசந்தானப் பிள்ளையார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்குப் பார்த்தபடி அருளுகிறார் திருக்காமேஸ்வரர். முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட லிங்க மூர்த்தம். இதனால்தான் இந்தப்பகுதிக்கு முசுகுந்தபுரம் என்றே பெயர் அமைந்ததாம். காலப்போக்கில் மருவி முசிறியானதாகச் சொல்வர். சிதிலம் அடைந்திருந்தாலும் சிற்ப வேலைப்பாடுகளால இருக்கிறது கோயில். ராவணனும் இங்கே பூஜித்து வழிபட்டதாகச் சொல்வர். முசுகுந்தச் சக்கரவர்த்தியும் சிவனாரை வழிபடுவது போலான சிற்பமும் இங்கே உண்டு. பிராகாரத்தின் குபேர மூலையில் வில்வமர நிழலில், ஐஸ்வர்ய மகுடத்துடன், தவம் செய்யும் நிலையில், ஐஸ்வர்ய மகாலட்சுமியாக, யோக மகாலட்சுமியாக, பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் தேவி. இங்கே, காலபைரவர் மற்றும் ஞானபைரவர் உண்டு. 

திருக்காமேஸ்வரர், திருச்சன்னிதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து, அதில் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படுகிறது. சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோவிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தல வரலாறு : ஈசனை விட, தானே உயர்ந்தவன்’ என்கிற செருக்கு கொண்டு, பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மகளான தாட்சாயினியின் கணவர் சிவபெருமானுக்கு, இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. வேண்டுமென்றே ஈசனை, தட்சன் தவிர்த்தான். ஆனால் தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், யாகசாலைக்கு சென்ற பராசக்திக்கு அவமானமே மிஞ்சியது.

கணவனின் சொல் கேட்காமல் வந்ததற்கு இது தேவைதான் என்று எண்ணிக்கொண்ட தாட்சாயினி, தந்தையின் யாகம் அழிந்துபோக சாபம் கொடுத்து விட்டு வந்தார். ஆனாலும், தனது சொல் கேட்காமல் சென்ற காரணத்தால், ஈசனின் கோபத்திற்கு ஆளானார். தான் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்ந்த தாட்சாயினி, பூலோகத்தில் மீண்டும் பிறப்பெடுத்து சிவபெருமானை அடையும் நோக்கில் தவம் இருந்தார்.

இறைவனும் இறைவியும் பிரிந்த காரணத்தால், உலக சிருஷ்டி தடைபட்டது. சிவனையும், சக்தியையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் கூடி விவாதித்தனர். சின்முத்திரையுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சிவபெருமானை விழிக்கச் செய்து, பார்வதியின் மீது ஈர்ப்புவர மன்மதனை அம்பு எய்தும்படி தேவர்கள் கூறினர். அதற்கு மன்மதன் மறுப்பு தெரிவித்தான். ஈசன் மேல் அம்பை தொடுப்பது எனக்கு நானே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம் என்று தேவர்களிடம் வாதாடினான். இதனால் தேவலோகமே ஒன்று திரண்டு மன்மதனுக்கு சாபமிட முயன்றதால், வேறு வழியின்றி ஈசன் மீது காம பாணம் தொடுக்க மன்மதன் ஒப்புக்கொண்டான். பல மைல் தூரத்தில் இருந்து காம பாணம் எய்திய, மன்மதனை தனது நெற்றிக் கண்ணை லேசாக திறந்து பார்த்தார் ஈசன். அதன் வெப்பம் தாங்காமல் மன்மதன் சாம்பலாகி போனான். அப்போது ஈசனுக்கு தன்னை நோக்கி தவம் செய்யும் பார்வதி தேவியின் எண்ணம் வந்து அவருடன் கூடி திருக்காமேஸ்வரராகவும், அன்னை பார்வதி தேவி சிவகாம சுந்தரியாகவும் காட்சியளித்தனர்.

இந்த நிகழ்வை சித்திரிக்கும் புடைப்புச் சிற்பம் கோவிலில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன் மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவி ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திருப்பி தர வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே நேரம் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு அற்றுப்போய், உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான். அதோடு, ‘மன்மத மதன களிப்பு மருந்து’ எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இந்த மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த அமுதம் அசுரர் களுக்கு கிடைக்காமல் இருக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியை பார்த்து, சிவபெருமான் மோகித்தார். இதையறிந்த மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். மேலும் இதுபற்றி சிவனிடம் கேட்டறிய அவரை அழைத்தாள். ஆனால் சிவபெருமான் வரவில்லை.

இதனால் பூலோகத்துக்கு சென்று வெள்ளூரில் ஈசனை நோக்கி தவம் செய்தாள். அப்போதும் சிவன் வரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன்பின் ஈசன், மகாலட்சுமி முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்த மாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விடியற்காலை 6 முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வர எல்லா தோஷங்களும் நீங்கி, வெற்றி மேல் வெற்றிகள் குவியும். மனக்குழப்பம், தோல்வி, ஏமாற்றம், வெற்றியில் தடை, திருமணம் குழந்தைப் பேறு குழப்பம், காரியத்தடை முதலியன நீங்க இந்த கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். திருமணம் நடப்பதற்கு இங்கு வந்து ஜாதகத்தை வைத்து வழிபடுகிறார்கள்.  அமாவாசை நாளில் ஆலயத்துக்கு வந்து திருக்காமேஸ்வரருக்கு வில்வ அர்ச்சனை செய்து, 11 நெய் தீபம் ஏற்றி, ஸ்வாமி அம்பாள் மற்றும் பிராகாரத்தில் உள்ள வில்வமரத்தையும் சேர்த்து வலம் வந்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. இதேபோல் லிங்க மூர்த்தத்துக்கு புனுகு சார்த்தி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் 

காலை 9.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  திருச்சிராப்பள்ளி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×