லால்குடி சப்தரீஸ்வர்

	


		
 
	
 
5:51:38 AM         Monday, March 08, 2021

லால்குடி சப்தரீஸ்வர்

லால்குடி சப்தரீஸ்வர்
லால்குடி சப்தரீஸ்வர் லால்குடி சப்தரீஸ்வர் லால்குடி சப்தரீஸ்வர் லால்குடி சப்தரீஸ்வர் லால்குடி சப்தரீஸ்வர் லால்குடி சப்தரீஸ்வர் லால்குடி சப்தரீஸ்வர் லால்குடி சப்தரீஸ்வர்
Product Code: லால்குடி சப்தரீஸ்வர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    லால்குடி , சப்தரிஷீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. ரயில் நிலையத்துக்கும் பேருந்து நிலையத்துக்கும் அருகிலேயே அமைந்துள்ளது.
இறைவன் : சப்தரிஷீஸ்வரர்
இறைவி  :  பெரிய நாயகி, மகாலட்சுமி, பைரவி
தல சிறப்புகள் :  இங்கு சற்றே வித்தியாசமான கோணத்தில் நவகிரக சந்நிதி வடிவமைக்கப் பெற்றுள்ளது.   இத்தலத்தில் சூரிய பகவானை நோக்கி நவகிரக சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.   மகாலட்சுமி வழிபட்டதலம்.  அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற  திருக்கோலத்தில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி. இவரை "வீணா தட்சிணாமூர்த்தி” என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது.  
கோவில் அமைப்பு : மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். அழகிய  சுயம்பு லிங்கம் மேற்கு பார்த்த சந்நதி.  திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய திரு நாமங்களும் உண்டு.  அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரிய நாயகி கிழக்கு பார்த்து  எழுந்தருளி, தனி சந்நதி கொண்டுள்ளார்.  மகாலட்சுமி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், பைரவி  எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். இத்தல  தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து, குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது.   இக்கோயிலில் விநாயகர், முருகன் உடன் வள்ளி தெய்வானை, ஐயப்பன், கால பைரவர், விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி பிரம்மா, 63 நாயன்மார்கள், ஆஞ்சநேயர் , நவக் கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம். 
தாண்டகத்தில் இத்தலம் எழுவர் தவத்துறை என்று குறிக்கப்படுகிறது. கோயிலில் தலப்பதிகக் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளன. நால்வர் பெருமக்களையொட்டி, நாயன்மார்களின் மூலத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. கருவறையின் வெளிப்புறத்தில் மேலும் கீழும் நிரம்ப கல்வெட்டுக்கள் உள்ளன. இடையில் யானை  யாளி சிற்பங்கள் சுற்றிலும் வரிசையாக உள்ளன. சக்தி விநாயகரின் பக்கத்தில் தலத்துத் திருப்புகழ்க் கல்வெட்டுள்ளது. தியாகப் பிரம்மம் இங்கு வந்துத் தங்கிப் பாடியுள்ள ஐந்து கீர்த்தனைகளும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன. தலத்துக்குரிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் அம்பாள் சந்நிதியில் உட்புறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.
தல வரலாறு : தமிழகத்தில் இக்கோயிலிலும், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயிலிலும், வாலீஸ்வரர் கோயிலிலும் கட்வங்கம் ஆயுதத்துடன் சிவ வடிவங்கள் காணப்படுகின்றன. தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் சிவனிடம் முறையிட்டார்கள் தேவர்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் சூரனை அழிக்க முருகன் பிறந்தான். அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம்பாலகனான முருகனைக் கொண்டுவந்து அந்த ஏழு குடில் பகுதியில் போட்டார். ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அக்குழந்தையைப் பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத்துவங்கினான். ஏழு பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். குழந்தைக்குப் பசி ஏற்பட அழுகை அதிகரித்தது. ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள், தூக்கி பரிவோடு தாலாட்டி பாலூட்டினார்கள். வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே. அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழைக் கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர். முருகப்பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.
தாரகாசூரனைக் கொன்றுபோட்டு, வெற்றி வீரராய் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, சப்த ரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார் முருகன். முனிவர்கள் நடுங்கினார்கள். குற்றம் செய்ததை அறிந்து, நேராகத் திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர். பலன் கிடைக்கவில்லை. பிறகு லால்குடி வந்து, சிவனை நினைத்துக் கடும் தவம் புரிந்தனர். கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்கு பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு தவமிருந்தனர். சுயம்புலிங்கமான சிவன், முனிவர்கள் தவத்தினை ஏற்று, அவர்களுக்கு சாப விமோசனம் தந்தார். தன் தலைப்பகுதி வெடிக்க அதிலே தீயினை உண்டாக்கினார் இலிங்கமூர்த்தி. அந்தத் தீப்பிழம்புகள் ஏழு முனிவர்களையும் உள்வாங்கிக் கொண்டது. இன்றும் லால்குடி சிவலிங்கத்தின் மேல்பகுதியில் வரிவரியாய் பள்ளம் இருப்பதைக் காணலாம். சிவனின் முழு அருளுக்கும் உரியவர்களாக ஏழு முனிவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், இறைவனின் பெயர் அன்றுமுதல் “சப்தரிஷிஸ்வரர்” என்று வழங்கப்பட்டது.
பரத கண்டத்தில் ஏழு முனிவர்கள், ஆதி முனிவர்கள் என்றும் அவர்களைக் கொண்டே கோத்திரங்கள் உருவானதாகவும் சொல்கிறது புராணம். இவர்களை சப்தரிஷிகள் என்பார்கள். இந்த ஏழு முனிவர்களும் ஒன்றாக வந்து, இந்தத் தலத்தில் தங்கி, தினமும் சிவபூஜை செய்து, கடும் தவம் மேற்கொண்டனர். எனவே எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கோத்திரமே அறியாதவர்களாக இருந்தாலும் அமாவாசை, பௌர்ணமி முதலான நாளில் இங்கு வந்து சிவனாரை மனதாரப் பிரார்த்தித்து, முடிந்தால் வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், நம் ஏழு ஜென்மப் பாவமும் தீரும். 
தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் நெய் விளக்கேற்றியும், விசேஷ பூஜைகள் செய்தும், நவகிரக  சந்நிதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.  இதனால் சகல தோஷங்களும் நீங்கப் பெறும். தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி, தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருச்சிராப்பள்ளி, லால்குடி
பேருந்து  வசதி   : உண்டு
தங்கும் வசதி   :  இல்லை
உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×