குலசேகரபட்டினம், சிதம்பரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் - கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமைந்த குலசேகரன்பட்டினம் உடன்குடிக்கு கிழக்கே 5 கிமீ தொலைவிலும், திருச்செந்தூருக்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : சிதம்பரேஸ்வரர்
இறைவி : சிவகாமி
தல சிறப்புகள் : பங்குனி உத்திரநாளில் சாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. நடராஜர் இத்தலத்தில் திருவாதிரை தரிசனம் காட்டிய தலம்.
தல வரலாறு : ஸ்ரீலங்கா இருந்து வந்த வணிகர் ஒருவர் திருவாதிரையில் சிதம்பரம் நடராஜர் தரிசிக்க செல்வார், ஒருமுறை புயல் மழையால் குலசேகரப்பட்டினம் வரை கப்பலில் வந்த இவர் தொடர்ந்து செல்லமுடியாமல் அங்கேயே தங்கி விட்டார். இறைவனை தரிசிக்க முடிய வில்லையே என்று கதறி அழுதார். ஆசிரி ஒன்று இங்குஇருந்து வடக்கு நோக்கி வரிசையாக சென்று உனக்கு வழி காட்டும் எறும்பு கூட்டங்கள் முடியும் இடத்தில் உனக்கு காட்சி தருவதாக கூறி மறைந்தது. தில்லையின் திருவாதிரை காட்சி தந்த இடத்தில் கோவில் கட்டி சிதம்பரேஸ்வரர் என பெயர் சூட்டினார்.
அகத்தியரின் சாபத்தால் வரமுனி என்ற முனிவர், எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட ‘மகிஷ’ உருவத்தில் அழையும்படி ஆனது. அசுர குலத்தில் பிறந்த மகிஷன், கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும், பிரம்மதேவரிடமும் பல வரங்களை வரமாகப் பெற்றான். அந்த வரங்களின் காரணமாக அவன் தேவர் களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், பார்வதி தேவியை உதவி புரிய கோரினார். இதையடுத்து அன்னை தேவர்களுக்கும், முனிவர்களுக்கு அபயம் அளிக்க முன்வந்தாள். பின்னர் மகிஷா சுரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள்.
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ‘தசரா திருவிழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 9 நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும், 10-ம் நாளான விஜயதசமி அன்று, மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.
குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னனே இந்த கோவிலை கட்டியுள்ளான். மேலும் இந்த ஊரில் உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலையும் இந்த அரசனே கட்டி முடித்துள்ளான். அக்கசாலை விநாயகர் கோவில், விண்ணகரப் பெருமாள் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாதி, உச்சினி, மகாகாளி, அங்காளம்மன், ஈஸ்வரி அம்மன், வண்டி மறித்த அம்மன் என அஷ்ட காளி கோவில்களும் குலசையில் அமைந்துள்ளன.
செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். ராகு தோஷம் அகல செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரமிட்டு, சாற்றை எடுத்து விட்டு, அதனுள் சிறிது நெய்விட்டு, திரியிட்டு எலுமிச்சை பழ தீபமேற்ற வேண்டும். ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆடி மாதம் 3-ம் செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பில் சிறப்பு வழிபாடு உண்டு. தசரா எனப்படும் நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தி பெற்றதாகும்.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி
அருகிலுள்ள நிலையம் : நாங்குநேரி , தூத்துக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை