கீழப்புளியூர், நாகநாதசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் குழிக்கரை அருகில் கீழப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : நாகநாதர்
இறைவி : புஷ்பவள்ளி
தல விருட்சம் : கொன்றை மரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல சிறப்புகள் : இக்கோயிலின் மூலவர் சுயம்புவாக உருவானவர். பங்குனி மாதத்தில் 21, 22, 23 ஆகிய நாள்களில் மூலவரின் மீது சூரிய ஒளியானது காலை 6.00 முதல் 6.15 மணி வரை விழுவது இக்கோயிலின் சிறப்பாகும்.
கோவில் அமைப்பு : இப்பகுதியில் புளிய மரங்கள் அதிகம் இருந்ததால் இவ்வூர் புளிப்பூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கீழப்புளியூர் என அழைக்கப்படுகிறது. கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. கோயிலில் ராஜ கோபுரம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், புராண சிறப்பு வாய்ந்தது. மராட்டிய வம்சத்தினரால் கட்டப்பட்டது. முன்ஒரு காலத்தில் மராட்டிய வம்சத்தை சார்ந்த வேத பாடம் சொல்லி தந்த பாட்டு வாத்தியார் நாகா தோஷத்தால் பாதிக்கப்பட்டார். கனவில் ஈசன் தோன்றி என்னை வழிபட தோஷம் நீங்கும் என்று கூறினார். பிறகு சிறு கோவில் அமைத்து வழிபட்டனர்.
பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இங்கு நாகதோஷம் நீங்க, புத்திர பாக்கியம் பெற சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிராத்தனை செய்கின்றனர்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை