விராலிப்பட்டி





	


	



























	




 




	








 




7:21:16 AM         Thursday, February 25, 2021

விராலிப்பட்டி

விராலிப்பட்டி
விராலிப்பட்டி விராலிப்பட்டி விராலிப்பட்டி விராலிப்பட்டி விராலிப்பட்டி விராலிப்பட்டி விராலிப்பட்டி விராலிப்பட்டி
Product Code: விராலிப்பட்டி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                   விராலிப்பட்டி, மகாலிங்கேஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின்  நத்தம் செல்லும் மார்கத்திலுள்ள விராலிப்பட்டி என்னும் ஊரிலிருந்து சுமார் 2.5 கி.மீ தொலைவில்  உள்ளது. 
இறைவன் : மகாலிங்கேஸ்வரர்
இறைவி : மரகதவல்லி, மாணிக்கவல்லி

தல சிறப்புகள் :  சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.  மூலவர் கருவறையில் ஏற்றப்படும் கற்பூர தீபம் மேலும் கீழுமாக இரண்டு தனித்தனி சுடர்களாக எரிவதைக் காணலாம்.  இரண்டு சுடர்களுக்கும் இடையே போதிய இடைவெளி தென்படுவது குறிப்பிடத்தக்கது. இச்சுடர்கள் ஆவுடை மற்றும் அதன் மேல் உள்ள பாணத்தை குறிப்பதாக கூறப்படுகிறது. ஈசனின் இந்த திருக்கோலத்தை இத்தலத்தை தவிர வேறெங்கும் காண முடியாது.
தல வரலாறு : சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய இராமர், தேவ குருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். அப்போது, தனக்கு உதவிய ஆஞ்சநேயருக்கு மரியாதை செய்யும்விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி பணித்தார். இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாகத் தலபுராணம் கூறுகிறது. மதுரையில் மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர். இதனால் மீனாட்சிக்கு “பஞ்ச ராஜ மாதங்கி” என்றும் பெயர் ஏற்பட்டது.
மூலவர் வசிட்ட  மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவரது மகன் பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டவர். இத்தலத்திலேயே பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இராவணன் சீதையை கவர்த்தபிறகு, ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடன் சீதையைத் தேடிய வண்ணம் இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். ராம லக்ஷ்மணரை அன்புடன் வரவேற்று உபசரித்த மகரிஷி, அவர்களை தன் ஆசிரமத்தில் அமுதுண்டு செல்லுமாறு கூறினார். சீதையைக் காணாத வருத்தத்திலிருந்த ஸ்ரீராமர், தான் சீதையை தேடி மீட்டபிறகு, மீண்டும் இவ்விடம் வருவதாகவும், அப்போது உணவருந்தி செல்வதாகவும் கூறி மகரிஷியிடம் விடைபெற்று சென்றார். பிறகு, ராவணனுடன் யுத்தம் செய்து, சீதையை சிறை மீட்டு, ராவணனின் தம்பி விபீஷணனின் வேண்டுகோளுக்கிணங்கி, ராவணனின் புஷ்பக விமானத்தில் அயோத்யா நோக்கி பயணமானார். விமானம் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தின் மேல் பறந்து செல்கையில், ஸ்ரீராமருக்கு தான் மகரிஷிக்கு தந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. உடனே, விமானத்தை இவ்விடத்தில் தரை இருக்குமாறு கூறினார். ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயரை கண்டு ஆனந்தம் அடைந்த மகரிஷி, அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். தன்னுடைய ஆசிரமவாசிகளை அழைத்து போஜனத்திற்கு ஏற்ப்பாடு செய்யுமாறு கூறினார். பரத்வாஜர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தங்கி செல்ல வேண்டி இருந்ததால், ஸ்ரீராமர் ஆஞ்சநேயரை அழைத்து, அவரை அயோத்யாவிற்கு விரைந்து சென்று தன்னுடைய வருகையை தெரிவிக்குமாறு கூறினார். ஸ்ரீராமரின் அடிபணிந்த ஆஞ்சநேயர் உடனே அயோத்யாவிற்கு பயணமானார். ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணனுக்கு வாழை  இலையில் உணவு பரிமாறினார் பரத்வாஜ மகரிஷி. ஸ்ரீராமர் மேல் கொண்ட அதீத அன்பினால் அவருக்கு பரிமாறின இலையை இரண்டாக கிழித்து தானும் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். இத்தகைய சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த இடமே இத்திருத்தலம். 

கோவில் அமைப்பு : சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு மூலவரின் வலதுபக்கத்தில் அம்மன் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்த சன்னதியில், மரகதவல்லியும், மாணிக்கவல்லியும் அருகருகே நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். இத்தகைய அமைப்பை இக்கோயிலை தவிர வேறெங்கும் காண முடியாது. மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, “ஒடுக்கம் தவசி மேடை” என்ற பெயர் ஏற்பட்டது.

பரத்வாஜ மகரிஷி தன்னுடைய ஆசிரமம் இருந்த இந்த தலத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். பரத்வாஜ மகரிஷி 16 அடி உயரம் கொண்டவர். பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தற்போது வாழும் நம்மை விட மிக உயரமானவர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 16 அடி நீளமான பரத்வாஜ மகரிஷியின் ஜீவசமாதியை இத்தலத்தில் நாம் இன்றும் காணலாம். ஈசனை தரிசிக்கவரும் பக்தர்களின் காலடி தன் மேல் பட வேண்டும் என விரும்பிய மகரிஷி ஈசன் சன்னதிக்கு முன் சயன நிலையில் ஜீவசமாதியில் உள்ளார். தன்னுடைய ஜீவசமாதியின் மேல் கட்டிடம் எதுவும் எழுப்பக்கூடாது என்ற மகரிஷியின் கட்டளைக்கேற்ப இப்போதும் அவரின் சமாதி வெறும் மண் தரையாகவே காணப்படுகிறது. தெற்கில் தலை வைத்து வடக்கில் கால் நீட்டிய படி ஜீவசமாதியில் உள்ள பரத்வாஜ மகரிஷியை தரிசனம் செய்ய கண் கோடி வேண்டும். மகரிஷியின் உயரத்தை உணர்த்தும் வண்ணம் அவரது சிரம் மற்றும் திருப்பாதம் அருகில் லிங்க பிரதிஷ்டைக் காணப்படுகின்றன.

கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்திற்கு வெளியே காணப்படும் மகா மண்டபம் இக்கோயிலில் இல்லை. இந்த இடத்திலிருந்து பார்த்தால் அம்மன்களின் திருவுருவைக் காண இயலாது. அர்த்த மண்டபத்திற்குள் சென்று கருவறைக்குள் எட்டி பார்த்தால் மட்டுமே தரிசனம் செய்யலாம். முற்காலத்தில் பெண்கள் பிற ஆண்கள் கண்களில் படாமல் வாழ்ந்த பண்பாட்டிற்கு ஏற்ப அம்மன்களின் திருவுருவங்களும் அமைய பெற்றிருப்பது வியப்பை அளிக்கிறது.

சிவாலயங்களில் ஈசான்ய திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை “ஆதி பைரவர்” என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனைத் தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள்.  கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனைத் தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆஞ்சநேயர் எடுத்துவந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என கூறப்படுகிறது. மூலிகைகள் நிறைந்த இந்த மலைக்கு செல்லும் பாதை கரடுமுரடானது. முட்செடிகள் நிறைந்தது. போகும் வழியில் முட்செடிகளால் காயம் அடைந்தாலும், சிறுமலை எல்லையைத் தொட்டவுடன் அந்த நிமிடமே காயங்கள் முற்றிலும் குணமாகும் அதிசயம் இன்றுவரை நடக்கிறது என கூறப்படுகிறது. மான் போன்ற வனவிலங்குகள் சிறுமலையில் வாழ்வதாகவும், அவற்றிக்கு அடிபட்டாலும், சிறுமலை எல்லையை தொட்டவுடன் காயம் தானாகவே ஆறிவிடும் என்றும் கூறப்படுகிறது.

மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. இத்தலத்தில் மாசி மகத் திருவிழா விசேஷமாக நடக்கும். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டுக்கல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×