கோமதி 




	


	



























	




 




	








 




7:13:10 AM         Thursday, August 06, 2020

கோமதி

கோமதி
கோமதி கோமதி கோமதி கோமதி கோமதி கோமதி கோமதி கோமதி கோமதி கோமதி கோமதி
Product Code: கோமதி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                      கோமதி ( துவாரகை)

பிறப்பிடம் :  இந்தியாவின் வடமேற்கு உத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட்பிராந்தியத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் உள்ள புல்கர்ஜீல் எனுமிடத்தில் உள்ள கோமதி ஏரியிலிருந்து உற்பத்தி ஆகிறது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, லக்கிம்பூர்,சுல்தான்பூர், ஜௌன்பூர் வழியாக 900 கிலோ மீட்டர் பாய்ந்து, இறுதியில் வாரணாசி மாவட்டத்தின் செய்யதுபூர் எனுமிடத்தில் கங்கை ஆற்றில் கலக்கிறது.

சுல்தான்பூர் மாவட்டம்   உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இது பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.கங்கையின் கிளைநதியான கோமதி ஆறு இம்மாவட்டத்தின் நடுவே செல்கிறது.

துவாரகா ஸ்ரீகிருஷ்ணர் கோயில்: இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் காட்சியளிக்கிறார். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.

சிறப்புகள்: உலகப்பாரம்பரிய களமாக அறிவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.

இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும். சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.

ஆன்மிகச் சிறப்பு :  கோமதி ஆறு  கங்கை ஆற்றின்துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்து தொன்மவியல் படி கோமதி ஆறு வசிட்டரின் மகளாக கருதப்படுகிறது. ஏகாதசி அன்று இவ்வாற்றில் குளிப்பதால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் சமய நம்பிக்கையாகும். பாகவத புராணத்தின் படி கோமதி ஆறுபரத கண்டத்தின் புனித ஆறுகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது. இவ்வாற்றில் வைணவர்கள் போற்றும் சுதர்சன சக்கர வடிவத்தில் கற்கள் கிடைக்கிறது.

துவாரகாதீசர் கோயில் :  108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.. இந்தியாவின் குஜராத்மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்தஇத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம்,துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கபிலா என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.

தல வரலாறு : தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி.மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மானிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயண விபரம்:  பிலிபித்

விமான நிலையம் :   அமுசி (லக்னோ )  228 கி.மீ

ரயில் நிலையம் :  பிலிபித்

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×