பஞ்ச குரோச தலங்கள்
	


	

	
 
	
 
2:57:33 PM         Thursday, September 23, 2021

பஞ்ச குரோச தலங்கள்

                                                                            பஞ்ச குரோச தலங்கள்
 
இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத காரியமாகவும் உள்ளது. ஏழை எளியவர்கள் அவ்வளவு தூரம் சென்று இறைவனை தரிசித்து வருவது என்பது சாத்தியமில்லை. அதற்காக உருவானவையே ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்ற ஐந்து சிவாலயங்கள். குரோசம் என்பதற்கு இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் என்று பொருள்.
 
தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, மனிதர்கள் பயன்பெறுவதற்காக அம்பெய்தி உடைத்தார், ஈசன். அந்த அமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி, ஐந்து தலங்களாக மாறியது. இந்த ஐந்து ஆலயங்களே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே காசிக்கு நிகரான இந்த ஐந்து தலங்களும் உள்ளன.

Refine Search

×
×
×
×
×
×
×