About Karma
Karma Registration
Satsung
Our Vision
Our Mission
Current Projects
Future Projects
How we work together
Join the Mission
Latest news Updates
Karma FAQ
Contact us
Enquiry
 


 


கர்மா பதிவு  

இது 100 % வியாபார நோக்கம் அல்லாத (Non - Commercial) இறைசார்ந்த அறக்கட்டளை.

இதில் பதிவு கட்டணம், வருட சந்தா இல்லை. மேலும் வேறு எந்தவிதத்திலும் பணம் பெறுதல் இல்லை.  திருக்கோயில் அறக்கட்டளை அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருக்கோயில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உங்கள் அமைப்பினை உங்கள் ஊரில் பதிவு செய்து, Karma Registration- ல் பதிவு எண் பெற்று, உங்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் பெயர், கைபேசி எண், மின் அஞ்சல் (E-mail ID) புகைப்படம் (Photo) ஆகிய விபரங்களை அனுப்பி உங்கள் அறக்கட்டளையின் கீழ் அனைத்து உறுப்பினர்களின் விபரங்களும் இந்த இணையதளத்தில் KARMA VOLUNTEERS  -ல் வெளியிட ஒத்துழைக்கவும்.  இதன் மூலம் பிற இடங்களிலிருந்து நீங்கள் திருப்பணி செய்யும் திருத்தலத்திற்கு வரும் அடியார்களுக்கு தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய பெருமைகளை கூறி இறையருள் பெற அடியார்களுக்கு உதவ பதிவு செய்யவும்.

இதில் அறக்கட்டளை தொடங்கியது முதல் இன்றுவரை திருக்கோயிலுக்கு செய்யப்பட்டுள்ள, செய்யவேண்டிய தகவல்களை இருபக்கத்திற்கு மிகாமல் service@karma.org.in என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும். இத்தகவல்   Karma Volunteers பகுதியில் வெளியிடப்படும்.

இதன் மூலம் கோயில் வளர்ச்சிக்காக உதவ முன்வருபவர்களிடமிருந்து பொருளுதவி பெற்று அத்திருப்பணியினை நிறைவேற்றி இறையருள் பெறுவோம்.