திருநட்டாலம்
	


		
 
	
 
11:09:43 PM         Wednesday, January 22, 2020

திருநட்டாலம்

Product Code: திருநட்டாலம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

 

12. திருநட்டாலம் சிவாலயம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் மார்த்தாண்டத்திலிருந்து தெற்கே செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மூலவர் : நட்டாலம் மகாதேவர்

கோயில் அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் பன்னிரெண்டாவது சிவாலயம் ஆகும். இங்கு இரு ஆலயங்கள் காணப்படுகின்றன. ஒன்று சங்கரநாராயணன் கோயில் மற்றொன்று சிவன்கோயில். கேரளக்கட்டடக் கலையைப் பின்பற்றியே கோயில் கட்டப்பட்டுள்ளது. சங்கரநாராயணன் கோயில் வியாக்கிரபாத முனிவரால் கட்டப்பட்டதென்று கூறுகின்றனர். மிகப்பெரிய தெப்பக்குளம் ஒன்று உள்ளது நான்கு பக்கமும் கற்சுவர்கள் எழுப்பி நீராடுவதற்குப் படித்துறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தெப்பகுளத்தின் மறுகரையில் உள்ள சிவாலயம் பீமசேனனால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

இரு கோயில்கள் தோன்றிய வரலாறு : பீமனுக்கும், புருஷமிருகத்திற்கும் அரியும், சிவனும் ஒன்றே என்பதை உணர்த்த விரும்பிய கிருஷ்ணன் செய்த நிகழ்ச்சி சிவாலய ஓட்டம் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளது 12 வது சிலையை பீமன் வைத்திட புருஷமிருகம் அதை வழிபட்டுவிட்டு பீமனை பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒருகால் புருஷமிருகத்தின் எல்லைக்குள் இருந்தது. அப்போது பீமன் புருஷமிருகத்தின் எல்லையைக் கடந்துவிட்டேன் என்னை விட்டுவிடு என்று கூறினான். அப்போது அங்கு வந்த தருமனிடம் புருஷமிருகம், நீதி வழங்குமாறு கேட்டது. தருமன் தம்பி என்றும் பாராமல் புருஷமிருகத்தின் எல்லைக்குள் ஒரு கால் இருந்ததால் பாதி உடல் புருஷமிருகத்திற்கே என்று தீர்ப்பளித்தான். புருஷமிருகம் மகிழ்ச்சி கொண்டு யாகத்திற்கு உதவுவதாக வாக்களித்தது. அப்போது கிருஷ்ணன் தோன்றி புருஷமிருகத்திற்கும் பீமனுக்கும் அரியும் சிவனும் ஒன்றே என்று உணர்த்தினார். அதனால் புருஷ மிருகம் சங்கரநாராயணன் கோயிலைக் கட்டியது. கிருஷ்ணனின் பக்தனாகிய பீமன் சிவன்கோயிலைக் கட்டினார் என்று கதை வழங்கப்படுகிறது கோயிலின் வலது பக்கம் குச்சரிமரம் என்ற ஒரு மரம் காணப்படுகிறது. அதன் அடியில் சப்த கன்னியர்கள் பகவதியம்மனை சுற்றியிருக்கும் ஒரு சிறு கோயிலும் காணப்படுகிறது.

விழாச்சிறப்பு : மாசி மாதம் சிவராத்திரி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நான்கு யாமமும் சிறப்பான தீபாராதனை நடைபெறும். பக்தர்கள் கூட்டம் பெருகியிருக்கும்.  மாசி மாதம் சிவனுக்கு உகந்தநாள். எனவே மக்கள் சிவராத்திரியன்று தூங்காமல் இறைவனின் திருநாமங்களை சொல்லியும், தோத்திரப் பாடல்களைப் பாடியும், நான்கு யாமமும் இறைவனின் திருவாலயங்களில் நடைபெறும் பூஜை தீபாராதனைகளிலும் கலந்து கொள்வது வழக்கம். குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் கையில் விசிறியோடு ஓடிச்சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருமலை தொடங்கி 12-வது கோயிலான நட்டாலத்தில் வந்து இறைவனை தரிசித்து ஓட்டத்தை முடித்துக் கொள்வார்கள்.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : குழித்துறை

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×