திருநந்திக்கரை
	


		
 
	
 
10:20:01 PM         Wednesday, January 22, 2020

திருநந்திக்கரை

Product Code: திருநந்திக்கரை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

 

04.திருநந்திகரை

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் சென்றால் குலசேகரம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருநந்திக்கரை அமைந்துள்ளது. திற்பரப்பிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது எழில்மிகு மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்துள்ளது. இது ஒரு குகைக்கோயிலாகும்.

மூலவர் : திருநந்திக்கரை மகாதேவர்

திருத்தல அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் நான்காவது சிவாலயம் ஆகும். சிவலிங்கம் போல உருண்டு திரண்ட ஒரு பாறையைக் குடைந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் இரண்டு அறைகளைக் கொண்டது. முதலில் சமசதுரமான ஒரு பெரிய அறை உள்ளது. உள் அறை சிறியது. இதில் ஒரு விக்கிரகமும் உள்ளது. உள்ளே செல்ல வாயில் அமைந்துள்ளது. மழைநீர் வாயிலுக்கு நேரே பாயாமலிக்க பாறையின் மேல் ஓடை அழகுபட அமைக்கப்பட்டுள்ளது. இப்பாறையில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது மலையடிவாரத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இது ஒரு பழமையான கோவில் என கூறப்படுகிறது. இது கேரள கட்டடக்கலைக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது. விமானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

 இங்கு மூலவர் பார்வதி சமேதராக காட்சி தருகிறார். தற்போது அமையப்பெற்றிருக்கும் கோயில் இறைவன் பாறையின் வெப்பம் தாளமுடியாமல் தெப்பக்குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி அவ்விடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டது ஆகும். கேரள தந்திரியால் வடிவமைக்கப்பட்டு ஆகமவிதிப்படி கேரள தச்சு சாஸ்திரப்படியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் ரிஷப மண்டபத்தில் 27 நட்சத்திரங்களையும் கொண்ட தணத்துவாரங்களும் 52 வாரங்களை கொண்டது ஒரு வருடம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் மேற்கூரை 52 கழுக்கோல்களால் ஆனதாகும்.

 இத்தலத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள குகைக்கோயில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திருத்தல வரலாறு : இராஜராஜசோழன் கடற்கரை ஊராகிய முட்டத்தைக் கைப்பற்றி அதற்குத் தன் பெயராகிய மும்முடிசோழ நல்லூர் என்று பெயரிட்டதோடு திருநந்திக்கரையில் கோயில் கொண்டுள்ள மகாதேவர்க்கு தன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதைய நட்சத்திரத்தன்று விழா கொண்டாடவும் ஏற்பாடு செய்தான் என்று திருநந்திக்கரை சாசனம் கூறுகிறது. இங்கு ஒரு ஆறு ஓடுகிறது. இதற்கு நந்தியாறு என்று பெயர். ந்நதியாற்றின் கரையிலமைந்த ஊராகையால் திருநந்திக்கரை என்ற பெயர் ஏற்பட்டதாக தெரிகிறது.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : குழித்துறை

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×