குரு - தென்குடி திட்டை 




	


	



























	




 




	








 




10:21:26 PM         Wednesday, January 22, 2020

குரு - தென்குடி திட்டை

குரு - தென்குடி திட்டை
குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை குரு - தென்குடி திட்டை
Product Code: குரு - தென்குடி திட்டை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

தென்குடித்திட்டை
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மீ இத்தலம் உள்ளது.
இறைவன் : ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
அம்பிகை : ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை
தலவிருட்சம் : ஆதியில் செண்பகம், தற்போது வில்வம்.
தீர்த்தம் : சூல தீர்த்தம் எனும் சக்ர தீர்த்தம்.
திருப்பதிகம் பாடியவர் : திருஞானசம்பந்தர் 
குரு ஸ்தலம்: ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.
சிறப்புகள்: ஆதி கல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல ஸ்தலங்கள் மீண்டும் பிரளயத்தில் மூழ்கியபின் தோன்றின. ஆனால் இத்தலம் மட்டும் இன்றளவும் அழியாமல் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது.ஊழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது இத்தலம். கைலாசம்,கேதாரம்,காசி,ஸ்ரீ சைலம்,காஞ்சி,சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களின் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத் தலமாக விளங்குவது திட்டை. ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் மீது, சூரியனின் கதிர்கள் பரவுகின்றன. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக்கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 25 நிமிடங்களுக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். 
கோயில் வரலாறு: திட்டை எனும் சொல்மேடு எனவும் பொருளப்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது நம்பிக்கை.
கோவில் அமைப்பு : இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார். முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். பிரம்மன்,மஹாவிஷ்ணு,முருகன்,வசிஷ்டர்,காமதேனு,ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர். காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும் ஜமதக்னி முனிவருடனும்,பரசுராமருடனும் ரேணுகாதேவி வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் புகழப்படுகின்றது. உள் திருச்சுற்றில் மேற்கு பிரகாரத்தில் கருவறைக்குப் பின்புறமாக ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் ஸ்ரீ சுப்ரமண்யப் பெருமானின் சந்நிதி விளங்குகின்றது. பிரம்மா,விஷ்னு,சுப்பிரமணியர்,பைரவர்,சூரியன்,யமதர்மன்,சனீஸ்வரன்,தேவேந்திரன்,ஆதிசேஷன்,வசிஷ்டர்,ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுர வழியாக உட்சென்று சில படிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். குரு பகவானின் தனி சந்நிதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.


ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. அழகிய கருங்கல் திருப்பணியுடன் ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம்.நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அம்பாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது நம்பிக்கை. இக்கோவில் விமானங்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆன அற்புதக் கலையம்சம் பொருந்தியதாய் உள்ளன.
நவக்கிரகங்களுள் ஒருவரான பிரகஸ்பதி எனும் வியாழ குரு, தனி சந்நிதியில்
சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் தெற்குமுகமாக நின்ற திருக்கோலத்தில் ராஜகுரு என அருள் பாலிக்கின்றார்.

 

சப்தரிஷிகளுள் ஒருவரான ஆங்கீரஸ முனிவரின் மகனாகிய பிரகஸ்பதி வாழ்வில் உன்னத இடத்தை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார்.

பிரகஸ்பதியின் தவத்துக்கு இரங்கிய எம்பெருமான் திட்டை ஸ்தலத்தில் அவருக்குக் காட்சி கொடுத்தார். அதன் பயனாக கிரக பதவி பெற்று நவக்கிரகங்களில் சுப கிரகமாக ஏற்றம் பெற்றார்.
தரிசன நேரம்: இக்கோவிலில் தினந்தோறும் காலை 7:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 74 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்  57 கி.மீ
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×