11. திரு ஆதனூர்




	


	



























	




 




	








 




8:42:36 AM         Saturday, January 18, 2020

11. திரு ஆதனூர்

11. திரு ஆதனூர்
11. திரு ஆதனூர் 11. திரு ஆதனூர் 11. திரு ஆதனூர் 11. திரு ஆதனூர் 11. திரு ஆதனூர் 11. திரு ஆதனூர் 11. திரு ஆதனூர் 11. திரு ஆதனூர்
Product Code: 11. திரு ஆதனூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
 

                                                                                    11. திரு ஆதனூர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் குடந்தையிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தத் திவ்யதேசத்தை பார்கவ சேத்திரம் என்பார்கள்.

மூலவர் : ஆண்டளக்கும்மையன் 

தாயார் : ரங்கநாயகி

விமானம் : ப்ரணவ விமானம்

தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி

திருத்தலச் சிறப்புகள் : தலையின் கீழ்மரக்காலும் இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். நாபியில் பிரம்மா திருவடிவில் திருமங்கைஆழ்வாரும் கன்றுடன் காமதேனுவும் உள்ளனர்.

ஆதனூரிலும் எம்பெருமானின் கர்ப்பக்கிருகத்திற்குள் இருதூண்கள் உண்டு. அவற்றை நாம் தழுவிக் கொள்வோமாயின் நாம் சொர்க்கம் செல்லலாம். இத்தலத்தின் கோபுரத்தில் மகாவிஷ்ணு சிலை உள்ளது. ஒங்கார பகவான் விஷ்ணு என்ற திருப்பெயரில் பிரணவ விமானத்தில் வாசுதேவன் உள்ளார். இவர் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது முடிந்து பிரளயம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம். இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும்போது ஆஞ்சநேயர் இவ்வூரில் இரண்டு தினங்கள் தங்கி இளைப்பாறிச் சந்தியா வந்தனம் செய்துவிட்டுப் போனதாகவும் உடனே ஸ்ரீராமபிரான் இங்கே வந்து எனது பக்தன் இங்கு வந்தாரா என்று  கேட்டுத் தனது திருவடியை வைத்து விட்டுச் சென்றதாகவும் வரலாறு. ஸ்ரீராமன் திருவடியும் ஸ்ரீஆஞ்சநேயரும் இங்கே பிரசித்தி பெற்று உள்ளனர்.

காமதேனு தவமிருந்த தலமாதலால் இத்தலம் ஆதன் ஊர் ஆதனூர் எனப் பெயர் பெற்றது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. ஆனால் பேருந்து வசதிகள் உண்டு. பயணத்தின் போது திருப்புள்ளம் புதங்குடியோடு சேர்த்து சேவிக்கலாம்.

சுவாமிமலையிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது.

விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : தஞ்சாவூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×