கோடகநல்லூர்
	


		
 
	
 
10:39:27 PM         Wednesday, January 22, 2020

கோடகநல்லூர்

Product Code: கோடகநல்லூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி - முக்கூடல் செல்லும் சாலையில் உள்ள நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

மூலவர் : கைலாச நாதர்

அம்பிகை : சிவகாமி அம்மன்

திருத்தலச் சிறப்புகள்: பரீட்சத்து மன்னரையும், நளனையும் தீண்டிய கார்க்கோடக பாம்புக்கு மகாவிஷ்ணு முக்தியளித்த தலம் இது என்பதால் இந்த 'கார்கோடக ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு கருநாகப் பாம்புகள் அதிகம். கோடைக்காலத்தில் இங்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அது நாளடைவில் மருவி கோடகநல்லூர் என்றாயிற்று என்பாரும் உளர்.

 இந்த ஊரின் மேற்கிலுள்ள பெரிய பிரான் கோயில் கல்வெட்டில் கோடனூர் என்ற குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நவகயிலாயத்தில் மூன்றாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் செவ்வாய் அம்சமாக விளங்குகிறார். இது செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.  ஊரின் வடக்கில் உள்ளது இந்த கோயில். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கோயிலுக்குள் கோபுரமோ, கொடிமரமோ இல்லை.

 ஆதிசங்கரர் இவ்வூரை 'தட்சிண சிருங்கேரி' என்று கூறியுள்ளார். தாமிரபரணி ஆற்றை இவ்வூர் மக்கள் 'தட்சிண கங்கை' என்கிறார்கள். மனோன்மணியத்தில் வரும் சுந்தர முனிவர் இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும்.

திருவாதிரை,  சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வேளை மட்டுமே பூசை நடைபெறுகிறது.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : சேரன்மகாதேவி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×