காவேரி




	


	



























	




 




	








 




11:43:58 PM         Wednesday, January 22, 2020

காவேரி

காவேரி
காவேரி காவேரி காவேரி காவேரி காவேரி காவேரி காவேரி காவேரி காவேரி
Product Code: காவேரி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


பிறப்பிடம்: இந்தியத்தீபகற்பத்தின்  தென் பகுதியில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.

கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர்ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள்வழியாவும் தமிழ்நாட்டில்தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல்,        கரூர், திருச்சி , தஞ்சாவூர்,நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இதன் நீளம் 800 கிமீ.

ஆன்மிகச் சிறப்பு: இந்தியாவின் நதிகளில் காவிரியும் ஒரு புனித நதியாகும். நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின் சக்தி ஆகியவைகளுக்கு காவிரி ஒரு முக்கிய மூலமாக இருப்பதினால், காவிரி நதி தென் இந்தியாவின் புராதன ராஜ்யங்களுக்கும், தற்போதைய நவீன நகரங்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது. கர்நாடகம் மற்றும் தமிழக பகுதிகளில் காவேரி நதியை, "காவேரி அம்மனாக' வழிபடுகின்றனர். காவேரி, மற்றும் காவேரியின் துணை நதிகளின் கரைகளில் நூற்றுக்கணக்கான கோயில்களும், மண்டபங்களும் உள்ளன. துணை நதிகள் காவிரியுடன் சங்கமிக்கும் பகுதிகளிலும், துணை நதிகளுடன் அவற்றின் உபநதிகள் சேரும் இடங்களிலும் பிரபலமான பல ஆலயங்கள் உள்ளன.

தலைக் காவிரியில் ஒரு புண்ணிய கோயில் நகரம் இருக்கிறது. அங்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை பஞ்சலிங்க தரிசனம் என்ற விழா காவிரி நதிக்கரையில் கொண்டாடப் படுகிறது. அந்த விழாக்காலங்களில் நதி நீரில் பக்தர்கள் நீராடுவார்கள்.காவிரி நதியை மிகவும் நம்பி உள்ள தமிழக மக்களும் காவிரிப் பெருக்கு என்ற விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

நதிகள் கூடும் இடங்களில் புனித நீராடுவது வாழ்வை மேன்மைப் படுத்தும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. ஆடி 18ஆம் நாளில் வரும் ஆடிப் பெருக்கு நாளிலும், மற்றும் ஐப்பசி முதல் நாள் வரும் "துலா ஸ்நானம்' நாளிலும், காவிரி வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். காவிரி பிறந்த இடமாக கருத படும் இடத்தில தற்சமயம் ஒரு குளம் உள்ளது  இந்த குளத்திற்கு நீரை கொண்டு வரும் சிறு பொய்கை யா க காவிரி பிறக்கிறது. பின்னர் அது தரைகடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கு அப்பால் காவேரி யாராக வெளிப்படுகிறது.இந்த குளத்தை ஒட்டி அகஸ்தி வர பகவான் கோயில் உள்ளது.புராணக் கதைகளின் படி அகஸ்தியர் தன கமண்டத்தில் இந்த காவேரியை அடக்கி வைத்துஇருந்ததாகவும் விநாயக கடவுள் காக்கை ரூபம் கொண்டு அகஸ்திய முனிவர் தவத்தில் இருந்த போது கமண்டலத்தை சாய்த்து காவேரியை பெருக்கெடுத்து ஓட வைத்ததாக கூறப்படுகிறது .    

தலை காவிரி பகுதில் பாக மண்டலம் என்ற இடமும் ஒன்று.8 கி மீ  தூரத்தில் அமைந்துள்ளது.  அருகில் கணபதி, சுப்ரமணியசுவாமி, விஷ்ணு கோயில் அமைந்துள்ளது.ஆயிரம் கணக்கான மக்கள் இதை தரிசிப்பதற்கு கூடுகின்றனர்.ஆயிரம் கணக்கான விளக்கு அச்சமயம் கோயில்களில்  ஏற்றப்படுகின்றது.

வரலாறு: இந்திய புண்ணிய நதிகள் ஐந்தில் காவிரி நதியும் ஒன்று. அது குறிப்பாகத் தென் இந்தியர்களால் மிகவும் போற்றப்படும் நதியாகும். அகத்திய முனிவர் எவ்வாறு தென் திசை நோக்கி வந்தார் வித்தியமலை உயர்ந்து அழகாகத் தோற்றமளிக்கும் மலையாக இருந்தது. வீண்குழப்பவாதி ஒருவன் விந்தியமலையின் முன்னிலையிலேயே மேரு என்ற வேறு ஒரு மலையைப் புகழ்ந்து முன்பொரு நாள் பேசினான். அதைச் செவுயுற்ற  விந்தியமலை பொறாமையினால் விண்ணை நேக்கி மேருவைவிட உயரமாக வளர ஆரம்பித்தது.

வெகு விரைவில், வளர்ந்த விந்தியமலை சூரியனை மறைத்து விட்டது. மக்கள், மிருகங்கள், காடுகள் அனைத்தும் விந்தியமலையின் நிழல்களால் சூழப்பட்டு, சூரிய ஒளி இல்லாமல் போய்விட்டது. சூரியன் செய்வதறியாது திகைத்தது. சூரியன் எவ்வளவு உயரமாகச் சென்றாலும், விந்தியமலை அதைவிட உயர்ந்து, சூரிய ஒளியை மறைத்தது. மக்கள், மிருகங்கள் மற்றும் காடுகள் அனைத்தும் வித்தியமலையை உயரமாக வளர்வதை நிறுத்தும் படி வேண்டியும், வித்திய மலை காது கொடுத்துக் கேட்க வில்லை.கடவுளர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. செய்வதறியாது, மிகவும் சக்தி வாய்ந்த அகத்திய முனிவரிடம் சென்று, உதவ வேண்டினர்.

அகத்திய முனி வித்தியமலைக்குச் சென்று, தான் தெற்கு நோக்கிச் செல்ல இருப்பதால், விந்திய மலையைக் குனியும் படிக் கேட்டார். அகத்தியர் கடந்து சென்ற பிறகு, தான் மீண்டும் திரும்பி வரும் வரை இப்படியே குனிந்த நிலையில் விந்தியமலையை இருக்கும் படிக் கேட்டுக் கொண்டார். வித்திய மலையும் அந்த உயரத்திலேயே அகத்திய முனி திரும்பி வரும் வரை இருப்பதாக உறுதிமொழி அளித்தது.  தெற்கே வந்த அகத்திய முனி, தெற்கிலேயே தங்கி விட்டார். இதனால், வித்திய மலையைச் சுற்றி உள்ள மக்கள் அனைவரும் ஆனந்தமடைந்தார்கள்.

நதியாக ஓட ஆரம்பித்ததும், அவள் காவிரி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள் – காவேராவின் மகளானதால் அப்பெயர் வந்தது. புண்ணிய நதியாக வேண்டும் என்ற விருப்பத்தால், காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம்   கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது.

இதிலிருந்து இன்னொரு புராண வரலாறும் உண்டு. கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு வருடமும், பூமியின் பாதாளம் வழியாக காவிரி நதிக்கு வந்து, குளித்து விட்டுப் போவதாக அந்த வரலாறு சொல்கிறது. இது விஷ்ணுமாயா விரும்பி வேண்டியபடி, அவள் பூமியில் மனித குலத்திற்கு உதவக் காவிரி நதியாக ஓடுவதாகச் சொல்வதற்குப் பொருத்தமானதாக இருக்கிறது.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயில் தென் இந்தியாவின் கோயில் கட்டிடக் கலைக்கே ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். ஸ்ரீரங்கத்தின் கோயில் கோபுரம் மிகவும் உயரமானதாகச் சொல்லப்படுகிறது. மேலும், உலகத்திலேயே பரப்பளவில் பெரியதான ஹிந்து கோயிலாகக் கருதப்படுகிறது. பெரிய பாம்பான ஆதிசேஷன் மேல் சயனம் செய்திருக்கும் கோலத்தில் உள்ள பகவான் விஷ்ணுவின் சிலை பிரார்த்தனை செய்வதற்கு வேண்டும் என்று பிரம்மா ஒரு காலத்தில் வேண்டினார் என்று ஸ்ரீரங்கப் புராண வரலாறு தெரிவிக்கிறது. பிரம்மாவின் வேண்டுதல் நிறைவேறியதால், ஆதி சேஷனில் சயனம் செய்யும் கோலத்தில் இருக்கும் விஷ்ணுவின் அழகான சிலை –ரங்கநாதன் என்று அழைக்கபடும் சிலை - பிரம்மாவிற்குக் கிடைத்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு மேல் சென்ற பிறகு, அந்தச் சிலையை அடைய ஒரு பெரிய யாகம் செய்த பிறகு, அந்தச் சிலை இஷ்வாகுவிடம் வந்தடைந்தது. ராமாயணக் காவியப் புகழ் ராமர் இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவராவார். அந்தச் சிலை அவரிடம் வந்ததிலிருந்து, அதை மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தார்.

இன்று நாம் காணும் அந்தப் பெரிய கோயில், ஒரு சோழ மன்னரால் வெகு காலத்திற்குப் பிறகு கட்டப்பட்டதாகும். இதில் ஆச்சரியப்படத் தக்க செய்தி என்னவென்றால், சிலை இலங்கையை நோக்கி இருப்பதுடன், கணேசர் கோயிலில் உள்ள சிலையில் தலையில் குட்டுப் பட்ட அடையாளத்தையும் காணலாம்.

பயண விபரம்: தலைக்காவேரிக்கு 

விமான நிலையம் : மங்களூர் ( 91 கி.மீ )

ரயில் நிலையம் : மைசூர்  ( 95 கி.மீ )   

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×